கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மது ப்ரியர்கள், மது கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். இதனிடையே பல்வேறு மாவட்டங்களில் கள்ளச்சாராய விநியோகம் அதிகரித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக காவல் துறையினருக்குத் தகவல் வந்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில் ஆய்வில் ஈடுபட்ட காவல் துறையினர், அம்மச்சியாபுரம் பகுதியில் வீட்டில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சியதைக் கண்டுபிடித்தனர்.
இதனைத்தொடர்ந்து அந்த பகுதிக்குச் சென்ற காவல் துறையினர், தண்ணீர் குடத்தில் ஊறல் போட்டு வைக்கப்பட்டிருந்த 8 லிட்டர் கள்ளச்சாராயத்தைக் கைப்பற்றி அழித்தனர். இதுதொடர்பாக அம்மச்சியாபுரம் பகுதியைச் சேர்ந்த சோலையப்பன் (36), அல்லி முத்து (21) ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
காவல் துறையினரைக் கண்டு தப்பியோடிய காமாட்சி, மதன், ராசா ஆகிய மூன்று நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர். இது குறித்து க.விலக்கு காவல் துறையினர் சார்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா... கஞ்சா இழுப்பதில் தகராறு!