ETV Bharat / state

குமுளி மலைச்சாலையில் பள்ளத்தில் இறங்கிய சரக்கு லாரி!

தேனி: குமுளி மலைச் சாலையில் கேரளாவில் இருந்து பாசிபருப்பு ஏற்றி வந்த சரக்கு லாரியானது பள்ளத்தில் இறங்கி விபத்து ஏற்பட்டது.

குமுளி மலைச்சாலையில் பள்ளத்தில் இறங்கிய சரக்கு லாரி
குமுளி மலைச்சாலையில் பள்ளத்தில் இறங்கிய சரக்கு லாரி
author img

By

Published : Dec 23, 2019, 11:20 AM IST

தமிழ்நாடு - கேரளா எல்லை பகுதியான குமுளி மலைப்பாதையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. நேற்று கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் இருந்து நாமக்கல்லைச் சேர்ந்த ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் (51) லாரியில் தேனி மாவட்டத்திற்கு பாசிப்பருப்பு ஏற்றிச்சென்றுள்ளார்.

லாரியானது குமுளி மலைச்சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் லாரி திரும்ப முடியாமல் சாலையின் வலது பக்கம் உள்ள பள்ளத்தில் இறங்கியது. கட்டுப்பாட்டை இழந்த லாரியை ஓட்டுநர் உடனடியாக நிறுத்தியதால் நல்வாய்ப்பாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.

குமுளி மலைப்பகுதியில் லாரி விபத்து

பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த குமுளி காவல் துறையினர் பள்ளத்தில் இருந்த லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 'அதிமுக செய்த துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்' - மு.க.ஸ்டாலின்!

Intro:          தேனி மாவட்டம் குமுளி மலைச் சாலையில் கேரளாவில் இருந்து பாசிபருப்பு ஏற்றி வந்த சரக்கு லாரி சாலையின் அருகே உள்ள பள்ளத்தில் இறங்கி விபத்து.
Body:         தமிழக - கேரள எல்லையான குமுளி மலைப்பாதையில் தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து தமிழக பகுதிக்கு சரக்கு பரிமாற்றம் இப்பகுதியில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று கேரளாவில் உள்ள ஆழப்புலாவில் இருந்து தேனிக்கு பாசிப்பருப்பு ஏற்றிச்சென்ற 12 டயர் கொண்ட டாரஸ் லாரி ஒன்று குமுளி மலைப்பாதையில் இறங்கிக்கொண்டிருந்தது. இந்த லாரியை நாமக்கல்லை சேர்ந்த ராதா கிருஷ்ணன் (51) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
         குமுளி மலைச்சாலையில் உள்ள மாதா கோவில் மேலே உள்ள கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பிய போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் லாரி திரும்ப முடியாமல் ரோட்டின் வலது பக்கம் உள்ள பள்ளத்தில் நேராகச் சென்றுள்ளது. உடனடியாக சுதாரித்த லாரி ஓட்டுனர் பிரேக் பிடித்துள்ளார். இருப்பினும் லாரியின் முன்பகுதி முழுவதும் பள்ளத்தில் சென்று இறங்கியது. பின்பகுதி சாலையிலேயே நின்றது. கீழே உள்ள பள்ளம் சுமார் 300 அடி பள்ளமாகும்.
         கட்டுப்பாட்டை இழந்த லாரியை உடனடியாக நிறுத்தப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார். தகவல் அறிந்து வந்த குமுளி காவல்துறையினர் பள்ளத்தில் இருந்த லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த 300 அடி பள்ளத்தில் லாரி கீழே சென்று இருந்தால் முற்றிலுமாக லாரி சுக்குநூறாக நொறுங்கி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
         
Conclusion: மேலும் இந்த விபத்து குறித்து குமுளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.