தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டகணல் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக நேற்று (ஜூன்13) பிற்பகல் முதல் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று (ஜூன்14) காலை முதல் நீரின் அளவு குறைந்து நீர் வரத்து சீரானதால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு தடை