தேனி பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அடுக்கம் வனப்பகுதியில் தீ பற்றிக்கொண்டதால் அதை கட்டுக்குள் கொண்டுவரும் தீவிர நடவடிக்கையில் வனத்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டனர்.
பலமணி நேரம் போராடியும் அவர்களால் தீயை அணைக்க முடியாததால் தீயணைக்கும் பணி இரவு முழுவதும் நீடித்தது, இறுதியில் தீயணைப்பு வீரர்கள் அதிகாலையில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கட்டுக்குள் அடங்காத தீ வேகமாக பரவியதால், அப்பகுதியில் வசித்து வரும் வன உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், அந்த வனப்பகுதியிலிருந்த அரிய வகை மரங்களும் தீயில் நாசமாகியுள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.