கேரளா: மூணாறு அருகே உள்ள ராஜமலை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு மாற்றுத்திற்பத்தில் கட்டப்பட்டிருந்த 10 மாடுகளை புலி தாக்கிக் கொன்ற நிலையில் புலியைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்
இந்த கூண்டில் புலி மாட்டிக் கொண்ட நிலையில் அதனை தேவிகுளத்தில் உள்ள கேரள வனத்துறைக்கு சொந்தமான பள்ளியில் வைத்து புலிக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர். 9 வயது பெண் புலிக்கு, அதன் கண்ணில் புரைநோய் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது
இதனை எடுத்து புலிக்கு மூன்று நாட்கள் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், கடந்த 8ஆம் தேதி புலியை
தேக்கடியில் உள்ள புலிகள் சரணாலயம் பகுதியில் கொண்டு விடப்பட்டது. புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் விதமாக அதன் உடலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட புலியின் நடமாட்டத்தை கேரள வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்
இந்நிலையில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட புலி ஒரே இடத்தில் இருப்பதைக் கண்டு சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் சென்று பார்த்தபோது புலி அங்கு இறந்து கிடப்பது தெரிய வந்துள்ளது. கண்ணில் ஏற்பட்ட புரை நோய் காரணமாக புலியினால் வேட்டையாட முடியாத சூழலில் பசியினால் புலி உயிரிழந்திருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இன்று புலியை பிரேத பரிசோதனை செய்து புலியின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். உள்ளனர்.
இதையும் படிங்க: திட்டங்களை விவசாயிகளிடம் திணிக்க வேண்டாம்... அதிகாரிகளை கடிந்து கொண்ட உயர்நீதிமன்றம்..