தேனி: இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருபவர், தேனி மாவட்டம் கூடலுரைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் தர்மராஜ் (23). இவர் நேற்று (செப்.13) தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் கம்பத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் கூடலூர் நோக்கி வந்துள்ளார்.
அப்போது, கூடலூரில் இருந்து கம்பம் நோக்கி நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த ராஜேஷ் குமார்(33) என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். கூடலூர் துர்க்கை அம்மன் கோவில் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், ராஜேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தர்மராஜ் மற்றும் லியோ சாம் ஆகிய இருவரையும் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி லியோ சாம் மற்றும் தர்மராஜ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
விபத்து குறித்து கூடலூர் வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: உணர்ச்சிபொங்க பேசிக்கொண்டிருந்தபோது திடீரென துண்டிக்கப்பட்ட மின்சாரம் - அமைச்சர் துரைமுருகனுக்கே இந்த கதி!