ETV Bharat / state

இது என்ன காதல் கடிதமா?.. வாங்கமாட்டேன் என திருப்பி அனுப்புவது - ஈபிஎஸ்ஸை கலாய்த்த புகழேந்தி! - இபிஸ்யை கடுமையாக விமர்சித்த புகழேந்தி

’அரசு தரப்பில் அனுப்பிய கடிதத்திற்குப் பதில் கடிதம் அனுப்ப வேண்டும் என்பது தான் நடைமுறை. இது என்ன காதல் கடிதமா? வாங்க மாட்டேன் என திருப்பி அனுப்புவது’ என எடப்பாடி பழனிசாமி குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

இது என்ன காதல் கடிதமா?.. வாங்க மாட்டேன் என திருப்பி அனுப்புவது- இபிஸ்யை தாக்கி பேசிய புகழேந்தி!

author img

By

Published : Jan 1, 2023, 7:42 PM IST

இது என்ன காதல் கடிதமா?.. வாங்கமாட்டேன் என திருப்பி அனுப்புவது - ஈபிஎஸ்ஸை கலாய்த்த புகழேந்தி!

தேனி: பெரியகுளம் தென்கரை அக்ரஹார தெருவில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில், அவரது ஆதரவு கொள்கை பரப்பு செயலாளரான புகழேந்தி மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர்களுடன் பெரியகுளத்தில் உள்ள ஓ. பன்னீர் செல்வத்தை சந்திக்க வந்த பின்பு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், ' ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஏற்க மறுத்துள்ளனர். அரசு தரப்பில் அனுப்பிய கடிதத்திற்குப் பதில் கடிதம் அனுப்ப வேண்டும் என்பது தான் நடைமுறை. இது என்ன காதல் கடிதமா? வாங்க மாட்டேன் என திருப்பி அனுப்புவது.‌ இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகள் அடிப்படையில் தான் மாநிலத் தேர்தல் ஆணையர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று கடிதம் அனுப்பி உள்ளனர்.

எனவே, இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகள் அடிப்படையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தான் தொடர்கின்றனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு மத்திய அமைச்சகம் சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இடைக்கால பொதுச்செயலாளர், பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு அனுப்பியது முன்னாள் சபாநாயகர் தம்பிதுரையின் தூண்டுதலின் காரணமாக மட்டும் தான் நடந்தது' என்றார்.

மேலும், 'திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக தொடர்ந்தால் அதிமுகவில் ஒரு சேர் கூட மிச்சம் இருக்காது. சொத்துகள் அனைத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு தான் விடுவார்கள். சசிகலாவை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என சொல்பவர்கள் யாராவது அவரது காலில் விழாமல் இருந்திருக்கிறார்களா?

அவரது காலில் விழுந்ததால் தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக முடிந்தது. சசிகலாவைப் பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு தகுதி கிடையாது. பொங்கல் பண்டிகைக்கு கரும்பு வழங்க வேண்டும் என முதலில் அரசுக்கு கோரிக்கை விடுத்தது ஓ.பன்னீர்செல்வம் தான்.

எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுத்ததால் தான் ஸ்டாலின் அத்திட்டத்தை செயல்படுத்தினார் என்பது ஏற்புடையது அல்ல. எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைக்கு இது வரை முதலமைச்சர் எவ்வித செவியும் சாய்க்கவில்லை.

இறுதியாக தற்போது கூட எடப்பாடி பழனிசாமி மன்னிப்புக் கடிதம் கொடுத்துவிட்டு ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையை ஏற்றுக்கொள்ளட்டும், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே ஓபிஎஸ் விருப்பமாகும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துக - தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.