ETV Bharat / state

தேனியில் பணத்தைத் திரும்பக் கேட்டவர் குத்திக்கொலை

தேனி: கம்பம் அருகே வாடகைக்கு இருந்த வீட்டைக் காலி செய்துவிட்டு பணத்தைக் கொடுக்காமல் இருந்தவரிடம் திருப்பிக் கேட்டவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

Theni crime news
Theni crime news
author img

By

Published : Feb 15, 2020, 3:02 PM IST

தேனி மாவட்டம், கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் உள்ள கருமாரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (45). முந்திரி வெட்டும் கூலித் தொழிலாளியான இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள முருகன் (50) என்பவருக்குச் செந்தமான வீட்டை ரூ. 80 ஆயிரத்துக்கு ஒத்திக்கு எடுத்து வசித்துவந்துள்ளனர்.

இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டின் ஒத்தி காலம் முடிந்து வேறு ஒரு வீட்டிற்கு குடியேறுவதற்காக சிவக்குமார் வீடு பார்த்து வந்துள்ளார். அதன் காரணமாக வீட்டின் உரிமையாளர் முருகனிடம் தொடர்ந்து வீட்டிற்கு ஒத்திக்குக் கொடுத்த பணத்தினை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், முருகன் பணத்தைக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, மனைவி, குழந்தைகள் மாமியார் வீட்டில் தங்கவைத்து விட்டு, சிவக்குமார் மட்டும் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு வீட்டின் அருகே முருகனிடம் பணத்தை சிவக்குமார் திருப்பிக்கேட்டபோது, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் தகராறு முற்றி ஆத்திரமடைந்த முருகனும் அவரது மனைவியும் வீட்டில் இருந்தக் கத்தியை எடுத்து சிவக்குமாரை சரமாரியாகக் குத்தியதாகக் கூறப்படுகிறது.

பணத்தைத் திரும்பக் கேட்டவர் குத்திக்கொலை

இதில், பலத்த காயமடைந்த சிவக்குமார் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிவக்குமாரை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தக் கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள இராயப்பன்பட்டி காவல் துறையினர், முருகனையும், அவரது மனைவியும் கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர். மேலும், சண்டையின்போது காயமடைந்த முருகன் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாட்டின் அட்சய பாத்திரம் அம்மா உணவகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.