ETV Bharat / state

தேனியில் ஒரே நாளில் 217 பேருக்கு கரோனா - தேனியில் 217 பேருக்கு கரோனா

தேனி: அதிமுக பிரமுகர்கள், கிளைச்சிறை முதன்மை காப்பாளர், ஆயுதப்படை காவலர் உள்பட ஒரே நாளில் 217 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona
corona
author img

By

Published : Jul 27, 2020, 7:51 AM IST

சென்னை, மதுரையைத் தொடர்ந்து, தேனி மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த பத்து நாள்களாக கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், மாவட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், தேனி நகர அதிமுக செயலாளர், பழனிசெட்டிபட்டி பேரூர் அதிகமுக செயலாளர், பெரியகுளம் கிளைச் சிறை முதன்மை காப்பாளராகப் பணியாற்றும் மதுரையைச் சேர்ந்த 42 வயது நபர், அதே சிறையில் காப்பாளர்களாக உள்ள மதுரையைச் சேர்ந்த 28வயது நபர், தேவதானப்பட்டியைச் சேர்ந்த 30வயது நபர், தேனி ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த 33 வயது காவலர் உள்பட நேற்று( ஜூலை 26) ஒரே நாளில் 217 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை, தேனியில் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 773 ஆக அதிகரித்துள்ளது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த 55வயது பெண், சின்னமனூரைச் சேர்ந்த 60வயது முதியவர், உத்தமபாளையத்தைச் சேர்ந்த 50வயது நபர், மற்றும் ஆண்டிபட்டியைச் சேர்ந்த 60வயது முதியவர் என, இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

தேனியில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தேனி (62 நபர்கள்), பெரியகுளம் (60) மற்றும் போடி (32) பகுதிகளைச் சார்ந்தவர்கள் எனக்கூறப்படுகிறது. தேனி மாவட்டத்தில், தற்போது வரை ஆயிரத்து 984 பேர் குணமடைந்துள்ளனர். ஆயிரத்து 741 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டெல்லியின் நிலைமை திருப்திகரமாக உள்ளது - சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.