கரோனா நோய்த்தொற்று தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த கொடிய நோயால் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நோய்த்தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையை போன்று உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் தேனி மாவட்ட கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் உள்பட இன்று ஒரே நாளில் மாவட்டத்தில் 286 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 9 ஆயிரத்து 122ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களில், மூன்று பெண்கள் உள்பட இன்று ஒரே நாளில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113ஆக உயர்ந்துள்ளது. தேனி மாவட்டத்தில் தற்போது வரை 6 ஆயிரத்து 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 3 ஆயிரத்து 4 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா வார்டில் நோயாளிகள் நடனம்!