ETV Bharat / state

குரூப் 2 தேர்வில் தோல்வி: விரக்தியில் வனவர் தூக்கிட்டு தற்கொலை!

தேனி: குரூப் 2 தேர்வில் தேல்வியடைந்த விரக்தியில் வைகை அணையில் வனவியல் பயிற்சி கல்லூரியில் பயிற்சிபெற்ற வனவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

theni ranger commit suicide
author img

By

Published : Oct 24, 2019, 3:55 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் தமிழ்நாடு அரசு வனவியல் பயிற்சி கல்லூரி செயல்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் வனத் துறை சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்வாகும் வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில் மதுரை பொன்னகரத்தைச் சேர்ந்த காசிலிங்கம் என்பவரின் மகன் விஜயநாராயணன் என்பவர், விடுதியில் தங்கி வனவர் பயிற்சி மேற்கொண்டுவந்தார். இந்நிலையில் இவர் டிஎன்பிஎஸ்சி எனப்படும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு எழுதியிருந்தார். தேர்வின் முடிவில் இவர் தேர்ச்சி பெறவில்லை. அதேநேரம் இவருடன் தங்கிப் பயிற்சி பெற்றிருந்த நண்பர்கள் சிலர் குரூப் 2 தேர்வில் தேர்ச்சிப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

வனவர் தூக்கிட்டு தற்கொலை

இதனால் மனவிரக்தியடைந்த விஜயநாராயணன் கல்லூரி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் குறித்து வனவியல் பயிற்சி கல்லூரி நிர்வாகம் சார்பில் வைகை அணை காவல் துறையினருக்குப் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்துவந்த காவல் துறையினர் விஜயநாராயணனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக வைகை அணை காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். தேர்வில் தோல்வியடைந்த விரக்தியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நாளை ‘பிகில்’ வெளியாவதற்கு தடை இல்லை!

Intro: குரூப் 2 தேர்வில்
தோல்வியடைந்ததால் விரக்தி..
வைகை அணை
வனவியல் பயிற்சி கல்லூரியில்
பயிற்சியில் இருந்த வனவர்
தூக்கு போட்டு தற்கொலை
Body: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் தமிழ்நாடு அரசு வனவியல் பயிற்சி கல்லூரி செயல்படுகிறது. தமிழகம் முழுவதும் வனத்துறை சீருடை பணியாளர்கள் மூலம் தேர்வாகும் வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது இங்கு 250க்கும் மேற்பட்ட வனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மதுரை பொன்னரகத்தை சேர்ந்த காசிலங்கம் என்பவரின் மகன் விஜயநாராயணன் என்பவரும், வைகை அணை வனவியல் பயிற்சி கல்லூரியில் விடுதியில் தங்கி வனவர் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் இவர் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு எழுதியிருந்தார். தேர்வின் முடிவில் இவர் தேர்ச்சி பெறவில்லை. அதேநேரம் இவருடன் தங்கி பயிற்சி பெற்றிருந்த நண்பர்கள் சிலர் குரூப்2 தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் மனவிரக்தி அடைந்த விஜயநாராயணன் கல்லூரி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து வனவியல் பயிற்சி கல்லூரி நிர்வாகம் சார்பில் வைகை அணை காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்த விஜயநாராயணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வைகை அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion: தேர்வில் தோல்வியடைந்த விரக்தியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.