ETV Bharat / state

எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல  - ஸ்டிக்கர் ஒட்டி பரப்புரை - தேனி உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை

தேனி: பெரியகுளம் அருகே உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பணத்திற்கு வாக்களிக்கக் கூடாது என்பதனை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஜனநாயகம் காப்போம் குழுவினர் கிராமத்திலுள்ள வீடுகள் தோறும் ஒட்டிவருகின்றனர்.

theni people campaigned on dont sale votes for money
எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல ஸ்டிக்கர் ஒட்டி மக்கள் பரப்புரை...
author img

By

Published : Dec 27, 2019, 7:54 AM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட லட்சுமிபுரம் ஊராட்சி, ஒன்பது வார்டுகளைக் கொண்டு 4727 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த ஊராட்சிக்கு வரும் 30ஆம் தேதி இரண்டாவது கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜனநாயகம் காப்போம் குழுவினர் ஓட்டுக்குப் பணம் வாங்குவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வீடுகள்தோறும் இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரிடமும் திண்ணை பரப்புரயை மேற்கொண்டனர்.

எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல ஸ்டிக்கர் ஒட்டி மக்கள் பரப்புரை...

இதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல போன்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை இக்குழுவினர் வீடுகள்தோறும் ஒட்டிவருகின்றனர்.

இதுகுறித்து குழு ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், தேர்தலில் ஓட்டுக்குப் பணம் வழங்குவதை தடுக்கவும் நேர்மையான நல்ல நிர்வாகம் தங்கள் பகுதிக்குத் தேவை என்பதால் மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

இதேபோல் அனைத்து கிராமங்களிலும் மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என முடிவெடுத்து மக்கள் மாற்றத்தை அடையவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டனர்.

இதையும் படியுங்க: 20 ரூபாய் பத்திரத்தில் தேர்தல் வாக்குறுதிகளை எழுதி வாக்கு சேகரிப்பு

Intro: எங்கள் வாக்கு! விற்பனைக்கு அல்ல! ஜனநாயகம் காப்போம்! கனவு மெய்ப்பட வேண்டும்! என்ற வாசங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடுகள் தோறும் ஒட்டிவரும் பெரியகுளம் கிராம மக்கள்.
Body: தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட லட்சுமிபுரம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 9 வார்டுகளை கொண்டு 4727 வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஊராட்சிக்கு வரும் 30ஆம் தேதி இரண்டாவது கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் ஜனநாயகம் காப்போம் என்ற குழுவினை அமைத்த அப்பகுதியினர், ஓட்டுக்கு பணம் வாங்குவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வீடுகள் தோறும் இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரிடமும் தின்னை பிரசாரத்தை மேற்கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில், எங்கள் வாக்கு! விற்பனைக்கு அல்ல! ஜனநாயகம் காப்போம்! கனவு மெய்ப்பட வேண்டும்! என்ற வாசங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை இக்குழுவினர், வீடுகள் தோறும் ஒட்டி வருகின்றனர். இது குறித்து இதன் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், தேர்தலில் ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுக்கவும், நேர்மையான நல்ல நிர்வாகம் தங்கள் பகுதிக்கு தேவை என்பதால், மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும், தங்கள் கிராமத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் இதை முழுவதும் செயல்படுத்தி ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுக்கவே இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்;.
மேலும் இது போன்று அனைத்து கிராமங்களிலும் மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என முடிவெடுத்து மக்கள் மாற்றத்தை அடையவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
Conclusion: ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்ற அப்பகுதி மக்களின் செயல் அனைவரது கவனத்தை ஈர்த்து வருகின்றது.
பேட்டி : வினோத் (ஒருங்கிணைப்பாளர், ஜனநாயகம் காப்போம் குழு.)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.