ETV Bharat / state

லஞ்சம் வாங்கிய புகாரில் தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்! - மீனாட்சி சுந்தரம்

தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக எழுந்த புகாரில், அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டு உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 30, 2023, 8:47 PM IST

பெரியகுளம்: தேனி மாவட்டம் கானாவிளக்கு பகுதியில் உள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் உணவகம் மற்றும் கேண்டினை மாரிச்சாமி என்பவர் நடத்தி வருகிறார். ஒவ்வொரு வருடமும் இந்த உணவகம் மற்றும் கேண்டின் டெண்டர் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டு வருவது வழக்கம்.

அந்த வகையில், கடந்த 12 ஆண்டுகளாக மாரிச்சாமி என்பவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கேண்டின் நடத்தி வருகிறார். மேலும், இந்தக் கேண்டின்கு தேவையான குடிநீர் மருத்துவமனையில் இருந்து பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம் இந்த கேண்டினுக்கு கொடுக்கப்பட்டுள்ள மூன்று குடிநீர் இணைப்புகளையும் துண்டிக்குமாறு உத்தரவிட்டதாகவும், அதை தொடர்ந்து மூன்று குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் குடிநீர் இல்லாத நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நாள்தோறும் 6 ஆயிரம் ரூபாய் கொடுத்து குடிநீர் பெற்று உணவகத்தை நடத்தி வந்தாகவும், தொடர்ந்து குடிநீர் இணைப்பு கிடைக்காததால் உணவகத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் கூறப்படிகிறது.

இந்த நிலையில் கேண்டினுக்கு குடிநீர் இணைப்பு கோடுக்க வேண்டும் என்றால் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம் பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மீனாட்சி சுந்தரத்திற்கு லஞ்சம் கொடுப்பது போல் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில், தேனி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணித்துறை இணை இயக்குனர் நேரில் சென்று உணவக உரிமையாளரிடம் வெளியான வீடியோ காட்சிகள் உண்மைதானா? என்று விசாரணை நடத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

இதனை அடுத்து விசாரணை செய்ததில், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம் லஞ்சம் வாங்கியது உண்மை என்று தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனை கேண்டினில் தண்ணீர் இணைப்புக்கு லஞ்சம்? தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரின் ஷாக்கிங் வீடியோ..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.