ETV Bharat / state

தேனி மக்களவை உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி

தேனி மக்களவை உறுப்பினர் ஓ பி ரவீந்திரநாத் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களை காவலர்கள் கைது செய்தனர்.

தேனி மக்களவை உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி ஓ பி ரவீந்திரநாத் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் தேனி மாவட்ட செய்திகள் Theni Lok Sabha member's office besiege Theni Lok Sabha besiege Theni latest news Theni district news

author img

By

Published : Jan 19, 2021, 4:07 AM IST

தேனி: தேனி மக்களவை உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மத்திய பாஜக அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 50 நாள்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக அரசுடன் நடைபெற்ற ஒன்பது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில வாக்களித்த அதிமுக மக்களவைத் தலைவரும், தேனி எம்.பியுமான ஓ பி ரவீந்திரநாத் அலுவலகத்தை இன்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் முற்றுகையிட முயன்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள ஓ.பி.ஆரின் எம்.பி. அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக வடகரை அம்பேத்கர் சிலை அருகே இருந்து ஊர்வலமாக தண்டுப்பாளையம் வழியாக வந்தனர். அவர்களை பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதனால் சாலையில் அமர்ந்தவாறு தேனி எம்.பி. ஓ.பி.ஆர் மற்றும் தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ்க்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர். இதையடுத்து, முற்றுகையிட முயன்று சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் 25க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதன் காரணமாக திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: 'எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று உருண்டு புரள்கிறார் ஸ்டாலின்'- ஓ பி ரவீந்திரநாத்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.