தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை பெண் காவலர், போடி நகர் காவல்நிலைய காவலர், தேனி நகர் காவல்நிலையத்தில் பணியாற்றும் சார்பு ஆய்வாளர் உள்பட 170 பேருக்கு இன்று (ஆகஸ்ட் 23) ஒரே நாளில் கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் நோய்த் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 445ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 9 ஆயிரத்து 235 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 ஆயிரத்து 76 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் சின்னமனூரைச் சேர்ந்த 66 வயது முதியவர், போடி டி.வி.கே.கே.நகரைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி, கோம்பையைச் சேர்ந்த 80 வயது முதியவர், தேனி முத்துதேவன்பட்டியைச் சேர்ந்த 60 வயது முதியவர் என நான்கு பேர் இன்று உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 197ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து நாளுக்கு நாள் பெருகி வரும் கரோனா பெருந்தொற்றால் தேனி மாவட்ட மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.