தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில், தேனி அல்லிநகரம் பெண் காவல் ஆய்வாளர், கூடலூர் ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவர், கம்பம் அரசு மருத்துவமனை ஆண் மருத்துவர், தீயணைப்பு படை வீரர் உள்பட மாவட்டத்தில் 126நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 927 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 234 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது 688 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று கண்டறியப்பட்டவர்களில் தேனி 49 பேர், கம்பம் (20), உத்தமபாளையம் (16), பெரியகுளம் (13), ஆண்டிபட்டி (10), போடி (9), சின்னமனூர் (5) மற்றும் மயிலாடும்பாறையை சேர்ந்த நால்வர் ஆவார்கள். இவர்களில் 77 ஆண்கள், 41 பேர் பெண்கள் அடங்குவார்கள். மீதமுள்ள எட்டு பேர் குழந்தைகள் ஆவார்கள்.
மேலும் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து வருகை புரிந்தவர்கள், தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என 755 நபர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: அரசின் நடவடிக்கையால் தொற்று விரைவில் குறையும் - அமைச்சர் ஜெயக்குமார்