தேனி மாவட்டத்தில் ஜாதி, மதம் மற்றும் சமூக மரபு பழக்க வழக்கங்களை இழிவுபடுத்தும் வகையில், சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியைச் சேர்ந்த கண்ணன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்து பெண்களை இழிவாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து, கண்ணன் சமூக வலைதளங்களில் அவதூறாகப் பதிவிட்டும், வீடியோவும் வெளியிட்டிருந்தார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த பெரியகுளம் தென்கரை காவல்துறையினர், அவரை கைது செய்து பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, விருதுநகர் சிறையில் கண்ணனை காவல்துறையினர் அடைத்தனர்.
இதையும் படிங்க:சாதிக்கான தலைவரல்ல;தமிழ் சமூகத்திற்கான தலைவர் திருமா!