ETV Bharat / state

தேனி அரசு மருத்துவமனையில் ஒரே இரவில் 20 செல்போன் திருட்டு! - ETV Bharat

Theni Government hospital mobile phones theft: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள வார்டுகளில் இரவில் படுத்து உறங்கும் நோயாளிகளின் உறவினர்களிடம் இருந்து நேற்று மட்டும் 20க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

theni-government-hospital-mobile-phones-theft
செல்போன்கள் பத்திரம்! - தேனி அரசு மருத்துவமனையில் ஒரே இரவில் 20 செல்போன் திருட்டு!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2023, 4:41 PM IST

தேனி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கானாவிலக்குகப் பகுதியில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களைப் பார்க்க வரும் உறவினர்களுக்கு இரவு நேரங்களில் நோயாளிகளுக்கு அருகே இருக்க அனுமதி இல்லாததால், மருத்துவமனை வார்டுகளின் வெளிப்புறப் பகுதிகளிலும், மருத்துவமனை வளாகத்திலுள்ள சாலையோரத் திட்டுகளிலும் படுத்து உறங்கி நோயாளிகளை கவனித்துச் செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்று (செப்.28) இரவு ஒரே நாளில் மருத்துவமனை சிகிச்சைக்காக வார்டுகளிலுள்ள பல்வேறு இடங்களில் படுத்து உறங்கிய பொதுமக்கள் 20க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: குப்பையை தரம் பிரிக்கும் இயந்திரத்தில் சிக்கிய ஊழியர் - கோவையில் பரபரப்பு!

தொடர்ச்சியாக, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வார்டுகள் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் படுத்து உறங்கும் பொதுமக்களின் செல்போன்கள் திருடப்படுவது வாடிக்கையாக உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கூறும்போது, தொடர்ந்து வார்டுகளில் அடிக்கடி இரவு நேரங்களில் இது போன்ற செல்போன் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்கள் இருந்தும் அது முறையாகச் செயல்படுவதில்லை என்றும், காவல் துறையினரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: தடுப்பூசியால் 4 மாத குழந்தை உயிரிழப்பு என புகார் - சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் என்ன?

தேனி அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் அரங்கேறும் இந்த தொடர் செல்போன் திருட்டுச் சம்பவங்களை உடனடியாக தேனி மாவட்ட காவல் துறையும், மருத்துவமனை நிர்வாகமும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நோயாளிகளைக் கவனித்துக் கொள்வதற்காக மருத்துவமனை வார்டுகள் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் இரவில் தங்கி உறங்குவதற்கு அச்சமாக உள்ளதாக மருத்துவமனைக்கு வரும் மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த செல்போன் திருட்டு சம்பவம் குறித்து கானாவிலக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 228 கிலோ கஞ்சா கடத்தல்: பாமக, பாஜக நிர்வாகிகள் உட்பட 13 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.