தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 17 வயதான கல்லூரி மாணவி காணாமல் போனதாக, கடந்த ஏப்.26ஆம் தேதி அவரின் தந்தை ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடிவந்தனர். தந்தை அளித்த புகாரில், மதுரை மாவட்டம், உத்தப்பநாயக்கனூர் அருகே உள்ள பாறைப்பட்டியை சேர்ந்த மதியழகன்(24) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் காணமல் போன மாணவி நேற்று மீட்கப்பட்டார். அவரிடம் விசாரித்தபோது, மதியழகன் மற்றும் உத்தப்பநாயக்கனூரை சேர்ந்த நண்பர் குமார்பாண்டி(24) ஆகிய இருவரும் கடத்தி சென்று துன்புறுத்தியதாக தெரிவித்தார். இதையடுத்து, மதியழகன் மற்றும் குமார் பாண்டி மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.