ETV Bharat / state

தேனி தொகுதிகள் உலா: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும், களநிலவரமும்..!

தமிழ்நாடு - கேரள மாநில எல்லையில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி பசுமைபோர்த்திய மாவட்டமாகத் திகழ்கிறது, தேனி. கடந்த 1996ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, தேனியைத் தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் இம்மாவட்டம். தொடக்கத்தில் வைகை வீரன் அழகுமுத்து மாவட்டம் எனப்பெயர் சூட்டப்பட்டு, பின்னர் தேனி மாவட்டமாக விளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் 29ஆவது மாவட்டமாக செயல்படத் தொடங்கிய தேனியின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில், கேரள மாநிலத்தின் எழில்மிகு இடுக்கி மாவட்டமும்; கிழக்கே கலாசாரத்தைப் பறைசாற்றும் மதுரை மாவட்டமும், விருதுநகர் மாவட்டமும், வடக்கே திண்டுக்கல் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

தேனி தொகுதிகள் உலா: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்..

author img

By

Published : Mar 6, 2021, 9:56 PM IST

வாசல் :

ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், கம்பம், பெரியகுளம்(தனி) ஆகிய நான்கு சட்டப்பேரவைத்தொகுதிகளையும், தேனி என்கிற ஒரு மக்களவைத் தொகுதியையும் கொண்டது, தேனி மாவட்டம்.

தொகுதிகள் வலம் :

ஆண்டிபட்டி :

இத்தொகுதியில் 1984ஆம் ஆண்டு போட்டியிட்டு, மக்களைச் சந்திக்காமல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவாறு வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனவர் எம்ஜிஆர். அதேபோல் டான்சி நில பேர வழக்கில் முதலமைச்சர் பதவியை இழந்த ஜெயலலிதா, மீண்டும் 2002இல் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார்.

இத்தகைய நட்சத்திர தொகுதியின் தீர்க்கப்படாதப் பிரச்னை தண்ணீர் மட்டுமே. ஏனெனில், பெரும்பாலான பகுதிகள் இத்தொகுதியில் மேட்டுப்பகுதியில் அமைந்திருப்பதால், வைகை அணை நீரைப் பயன்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது. இதற்காக எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் திட்டமிட்ட திப்பரேவு அணைத் திட்டம் 40 ஆண்டுகளை நெருங்கியும், இன்னமும் செயல்படுத்தவில்லை. கடந்த 2004ஆம் ஆண்டு மத்திய, மாநில அரசுகள், நெசவாளர்களின் பங்களிப்புடன் ரூ.100 கோடி மதிப்பில் 'ஹைடெக்' ஜவுளிப்பூங்கா அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கிய நிலையில், மாநில அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யாததால் தற்போது வரை இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பெரியகுளம் (தனி):

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே நகராட்சியாக உருவாக்கப்பட்டது பெரியகுளம். மாவட்டத்தின் தலைநகரான தேனி - அல்லிநகரம் நகராட்சி, பெரியகுளம் தொகுதியின் கீழ் வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.

கடந்த 2008 தொகுதி மறு சீரமைப்பிற்குப் பிறகு,பெரியகுளம் தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டது. விவசாயத்தை மட்டும் பிரதானமாக கொண்டுள்ள பெரியகுளத்திற்கு வளம் சேர்ப்பது நகரின் மையத்தில் ஓடும் வராக நதி. இதுதவிர சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, கும்பக்கரை அருவி, கல்லாறு, செலும்பாறு, பாம்பாறு உள்ளிட்டவைகளும் பெரியகுளம் தொகுதியின் பிரதான நீர் ஆதாரங்களாகும். இதன்மூலம் மா, நெல், வெற்றிலை, தென்னை, செங்கரும்பு உள்ளிட்டப் பயிர்களின் சாகுபடி சுற்றுவட்டாரத்தில் நடைபெறுகிறது.

என்னதான் துணை முதலமைச்சர் பெரியகுளத்தில் வசித்தாலும் அவரது ஊரில் வளர்ச்சித் திட்டங்கள் ஏதும் செயல்படுத்தப்படாததால் பின்தங்கிய பகுதியாகவே இருக்கிறது. பல ஏக்கர் பரப்பளவில் இங்கு நடைபெறும் மா விவசாயத்திற்கு வலு சேர்க்கும் வகையில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும், கும்பக்கரை அருவிக்கு கீழ் வௌவால்துறை பகுதியில் புதிய அணை கட்ட வேண்டும், வராக நதியில் சாக்கடை நீர் கலப்பது தடுக்கப்படவேண்டும்.

சோத்துப்பாறை கூட்டுக்குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தற்போது வரை உயிர் பெறவில்லை. புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் வேண்டும், மீறு சமுத்திரம் கண்மாயை சுத்தப்படுத்தி படகுசவாரி ஏற்படுத்துதல் வேண்டும், சுற்றுலா தலங்களை நவீனப்படுத்தி வருமானத்தைப் பெருக்குதல் ஆகியவை இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளாகும்.

தேனி தொகுதிகள் உலா

போடிநாயக்கனூர்:

நறுமணப் பொருட்களின் 'ராணி' எனப்படும் ஏலக்காய் வர்த்தகம் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திற்கு அடுத்தபடியாக, அதிகம் நடைபெறுவது போடிநாயக்கனூரில் மட்டுமே. இவ்வூரில் ஓடும் கொட்டக்குடி ஆற்றுப் பாசனத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் மா, இலவம், தென்னை உள்ளிட்டவைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. போடி மெட்டு, குரங்கணி, கொட்டக்குடி, டாப் ஸ்டேசன் உள்ளிட்ட பகுதிகளில் விளையும் ஏலம், காபி, மிளகு, எலுமிச்சை, அவகொடா உள்ளிட்டப் பயிர்கள் இவ்வூரில் தான் சந்தைப்படுத்தப்படுகின்றன.

எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட ஜெயலலிதா, அவரது மறைவிற்குப்பிறகு 1989இல் முதன்முதலில் மக்களைச் சந்தித்து போட்டியிட்டு வெற்றி பெற்றுதும் போடிநாயக்கனூரில் தான். இதன்மூலம் தமிழ்நாட்டின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தினை அவர் பெற்றார்.

அதேபோல் தொகுதி மறு சீரமைப்பால் சொந்த ஊரில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்ட ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூரில் நின்று 2011, 2016 என, இரு முறை வெற்றி பெற்றார். தற்போது மூன்றாவது முறையாக இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.

அவரது வெற்றிக்குப்பிறகு தான் போடி தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில் நுட்பக் கல்லூரி, தொழிற்பயிற்சி மையம், சட்டக்கல்லூரி மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி எனப் பல்வேறு கல்வி நிலையங்கள் இத்தொகுதியில் அமைந்தது.

இருந்தபோதிலும் கொட்டக்குடி ஆற்றில் புதிய அணை கட்டுவது, குரங்கணி - டாப் ஸ்டேசன், ஊரடி, ஊத்துக்காடு உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கு சாலை அமைப்பது, 18ஆம் கால்வாய் நீட்டிப்புப் பகுதிகளை அதிகரிப்பது உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன.

மேலும் போடி தொகுதிக்கு உட்பட்ட பொட்டிபுரம் பகுதியில் இந்திய அரசால் செயல்படுத்தப்பட உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்தால் பொதுமக்களுக்கு உண்டான அச்சம் தீர்ந்தபாடில்லை.

கம்பம்:

முல்லைப்பெரியாறு அணையின் நேரடி பாசன வசதி அடையும் கம்பம் பள்ளத்தாக்கில் இரு போக நெல் சாகுபடி பிரதானத் தொழிலாகும். இதற்கு அடுத்தபடியாக திராட்சை, வாழை சாகுபடியில் முன்னிலை வகிப்பது கம்பம் தொகுதி. தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாகத் திகழும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்பதே தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாகும்.

பழரச ஒயின் தொழிற்சாலை, வாழை விவசாயத்திற்குப் பதனிடும் தொழிற்கூடம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை ஒவ்வொரு தேர்தலில் அள்ளித்தெளிக்கும் வாக்குறுதியாகவே உள்ளது. தேவாரம் சாக்கலூத்து மெட்டு சாலை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை.

கள நிலவரம்:

கடந்த காலங்களில் அதிமுகவின் கோட்டையாக கருதபட்ட தேனி மாவட்டம், ஜெயலலிதாவின் மறைவிற்குப்பிறகு உண்டான பிளவால், சரிவைச் சந்தித்துள்ளது. எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகளை முதலமைச்சர்களாகத் தேர்ந்தெடுத்து அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை எனச் சொல்லப்பட்ட ஆண்டிபட்டி, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்ஸின் சொந்த ஊரான பெரியகுளம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளில், கடந்த 2019 இடைத்தேர்தலில் திமுகவிடம் தோல்வியைத் தழுவியது அதிமுக. மாவட்டத்தில் உள்ள நான்கில் திமுக -2, அதிமுக-2 என சமபலத்தில் உள்ளன.

நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேனி மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றிக்கனியைப் பறித்து விட வேண்டும் என்ற முனைப்புடன் திட்டம் வகுத்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். அதே வேளையில், ஓ.பி.எஸ்ஸுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே தங்க தமிழ்ச்செல்வனை அவர் போட்டியிடும் போடி தொகுதி, குடியிருக்கும் பெரியகுளம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் பொறுப்பாளராக களம் இறக்கியுள்ளது திமுக.

இது ஒரு புறம் என்றால் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், தேனி மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவேன் என அறிவித்திருப்பது ஓ.பன்னீர்செல்வத்திற்கு கடும் சவாலாக அமைந்திருக்கிறது. அவ்வாறு களம் இறங்கினால் தேனி மாவட்ட அரசியல் களம் பரபரப்பாகவே இருக்கும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.