ETV Bharat / state

4 கி.மீ., தூரம் வனப்பாதைக்கு 39 ஆண்டு கால போராட்டம் - தமிழ்நாடு வனத்துறையால் 100 கி.மீ., தூரம் கேரளாவைச் சுற்றும் விவசாயிகள்...! - அசோகர் பசுமை இயக்கத்தின் தலைவர் திருப்பதி வாசகன்

தேனி: தேவாரத்தில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் கேரளாவை இணைக்கக் கூடிய சாக்கலூத்து மெட்டுச் சாலையை அமைக்க வேண்டும் என்ற தேனி மக்களின் 39 ஆண்டு கால கோரிக்கைக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது தமிழ்நாடு வனத்துறை. இது குறித்த ஒரு சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்...

sakkaloothu_mettu
sakkaloothu_mettu
author img

By

Published : Nov 15, 2020, 8:40 PM IST

தமிழ்நாட்டின் தென்மேற்கு பகுதியில் கேரள மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது தேனி மாவட்டம். கேரளாவின் இடுக்கி, பத்தினம்திட்டா, எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தரை வழியாக செல்ல தேனி மாவட்ட வழித்தடம் ஏற்றதாகும். இதற்காக குமுளி, போடி மெட்டு, கம்பம் மெட்டு ஆகிய மூன்று மலை சாலைகள் மட்டுமே பிரதான வழித்தடமாக உள்ளன. நான்காவது வழித்தடமாக தேவாரத்தில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாக்கலூத்து மெட்டு சாலையை அமைக்க வேண்டும் என்பது தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

தேவாரம் - சாக்கலூத்து மெட்டு சாலை அமைக்கப்பட்டால், தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், பல்லவராயன்பட்டி, சிந்தலைச்சேரி, பொட்டிப்புரம், மல்லிங்காபுரம், சங்கராபுரம், டி.மேட்டுப்பட்டி, உள்ளிட்ட 30 கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகள் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடுங்கண்டம், உடும்பஞ்சோலை ஆகிய பகுதிகளுக்கு நாள்தோறும் 18 கிலோ மீட்டர் தூரத்தில் கூலி வேலைக்கு சென்று வரமுடியும். சாலை வசதி இல்லாததால் 100 கிலோ மீட்டர் தூரம் பயணித்து எட்டு மணி நேரம் பார்க்கும் வேலைக்கு 4 மணி நேரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.

sakkaloothu_mettu
sakkaloothu_mettu

100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்த சாக்கலூத்து மெட்டு சாலையை முடக்கிய தமிழ்நாடு வனத்துறை:

மன்னர்கள், ஜமீன்தாரர்கள் ஆட்சி காலத்தில் ஒருங்கிணைந்த பகுதியாக கேரளா இருந்தபோது உடும்பஞ்சோலையில் உள்ள தோட்டங்களுக்குச் சென்று வர தேவாரம், அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் சாக்கலூத்து மெட்டு சாலையை கழுதைப் பாதையாக பயன்படுத்தி வந்தனர். அதன் மூலம் அங்கு விளையக்கூடிய ஏலம், காபி, மிளகு, தேயிலை உள்ளிட்ட பயிர்களை கழுதைகள் உதவியுடன் கொண்டு வந்து சந்தைப்படுத்தினர். இது ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்திலும் தொடர்ந்தது. பிறகு, 11 அடி அகலம் நிறைந்த சாலையாக மாற்றப்பட்டு வண்டிப்பாதையாக பயன்படுத்த தொடங்கினர். அவ்வப்போது சாலைகளில் ஏற்படும் மராமத்து பணிகளையும் தேவாரம் பகுதி விவசாய சங்கங்களே செய்து வந்தன. ஆனால் சுதந்திரத்துக்கு பிறகு, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்கள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன. அதன் பிறகு 1970-75ஆம் ஆண்டின் காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட வனச்சட்டத்தால் சாக்கலூத்து மெட்டு சாலையை விவசாயிகள் பயன்படுத்த வனத்துறை தடை விதித்தது.

sakkaloothu_mettu
sakkaloothu_mettu

40 ஆண்டு கால போராட்டம்:

தேவாரம் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 1981ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் அப்போதைய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த குழந்தைவேலு, சாக்கலூத்து மெட்டு சாலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
விவசாயிகளின் தொடர் போராட்டத்துக்கு பிறகு, 1981ஆம் ஆண்டு சாக்கலூத்து மெட்டு சாலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டதை கொள்கை ரீதியில் ஏற்பதாக 2007ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் வனத்துறை அறிவித்தது. ஆனால் வனத்துறை சட்டம் 1980இன் கீழ் கருத்துரு அனுப்பினால் மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்படும் என வனத்துறை தெரிவித்தது. அதைத் தொடர்ந்து எந்தவொரு பணிகளும் நடைபெறாமல் ஆண்டுகள் கடந்தது தான் மிச்சம்.

விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கையை மீண்டும் ஏற்ற தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், 2017ஆம் ஆண்டு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் முதன்மை வன அலுவலர் உள்ளிட்ட வனத்துறை உயர் அலுவலர்களுடன் சாக்கலூத்து மெட்டு சாலையை நேரில் சென்று பார்வையிட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கு பரிந்துரை செய்தனர். அதன்படி, மாநில நெடுஞ்சாலைத் துறையின் மூலம் திட்ட மதிப்பீடு தயார் செய்து வனத்துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் மாவட்ட வனத்துறையோ மேலிடத்துக்கு அனுப்பியிருப்பதாக பதிலளித்து வந்தது. இதனால் தேவாரம் அருகே உள்ள டி.மேட்டுப்பட்டியில் இருந்து சாக்கலூத்து மெட்டு அடிவாரம் வரையில் உள்ள 11 கி.மீ., தூரம் வரை மட்டுமே நெடுஞ்சாலை துறை சார்பில் தார் சாலை அமைக்கப்பட்டது. எஞ்சிய 4 கி.மீ., தூரம் வனக்கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் சாலை அமைப்பதற்கு வனத்துறை அனுமதி மறுத்ததால் அரசு சார்பில் ரூ. 15 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்தும், சாக்கலூத்து மெட்டு இணைப்பு சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

sakkaloothu_mettu

மாவட்ட வனத்துறையின் முட்டுக்கட்டை:

சாக்கலூத்து மெட்டு சாலை 1/8 சரிவுள்ள தாழ்வான பகுதியாகும். இது யானைகள் வழித்தடமாக இருப்பதால் வாகன போக்குவரத்துக்கு அனுமதிக்கும் பட்சத்தில், வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும். அப்பகுதியில் உள்ள ஏராளமான வற்றாத நீரோடைகள் சேதப்படுத்தப்படும். சுற்றுச்சூழல் பாதிப்பு, விலங்குகள் - மனித மோதல்கள் ஏற்படும் என்பதாலும், கேரளாவுக்குச் செல்ல மாற்றுப் பாதைகள் இருப்பதால் சாக்கலூத்து மெட்டு சாலை அமைக்க வேண்டிய அவசியமில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அசோகர் பசுமை இயக்கத்தின் தலைவர் திருப்பதி வாசகன் என்பவர் எழுப்பிய கேள்விக்கு மாவட்ட வன அலுவலர் கௌதம் பதிலளித்தார்.

விவசாயிகள், தொழிலாளர்களின் கருத்துக்கள்:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கேரள வழித்தடங்களும் யானைகள் நடமாட்டம் நிறைந்த பகுதியாகத் தான் உள்ளன. அவற்றுக்கெல்லாம் வாகன போக்குரவத்துக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த சாலை அமைவதால் வற்றாத நீரோடைகள் சேதமடைவதோ, வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதெல்லாம் ஏற்க முடியாதவை. தேவாரம் - சாக்கலூத்து மெட்டு சாலை அமைக்கப்பட்டால் கேரளா செல்லும் தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்கிறார் அசோகர் பசுமை இயக்கத்தின் தலைவர் திருப்பதி வாசகன்.

sakkaloothu_mettu
sakkaloothu_mettu

சாக்கலூத்து மெட்டு சாலையானது தேனி மாவட்டத்தில் வளர்ந்து வரக்கூடிய தேவாரம் பகுதிக்கு அவசியமானது என அரசு அலுவலர்கள், ஆட்சியாளர்களுக்கு நன்கு தெரியும். இந்த சாலை அமைந்தால் தேவாரத்தில் இருந்து 100 கி.மீ., தூரம் பயணம் செய்வது குறைக்கப்பட்டு 18 கி.மீ., தூரத்தில் கேரளாவை அடைந்து விடலாம். இதனால் ஏற்படும் நன்மையால் உண்டாகும் பொருளாதார மிச்சம், எரிபொருள் சேமிப்பு, பயண நேரம் குறைவு ஆகியவற்றை கணக்கிட்டால் ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் இந்த பகுதி மக்களால் மிச்சப்படுத்த முடியும் என்று ஆலோசனை வழங்குகிறார் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம்.

கேரளாவின் வண்டிப்பெரியாறு, பீர்மேடு, உடும்பஞ்சோலை, நெடுங்கண்டம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏலம், காபி, தேயிலை, மிளகு போன்ற தோட்டங்களுக்கு தேவாரம், அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். காலை 8 மணிக்கு தோட்டங்களில் இருப்பதற்கு, இங்கிருந்து அதிகாலை 3 மணிக்கெல்லாம் புறப்பட வேண்டும். சாக்கலூத்து மெட்டு சாலை அமைந்தால், ஒரு மணி நேரத்துக்கு முன்பாக புறப்பட்டால் போதுமானது என்கிறார் தேவாரத்தைச் சேர்ந்த விவசாயி நாகராஜன்.

காலத்தின் தேவை, விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்களின் நலன் கருதி சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையில் தேவாரம் - சாக்கலூத்து மெட்டு சாலை அமைக்கப்பட வேண்டும் என்பதே தேனி மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.