தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சாத்தா கோவில்பட்டியை சேர்ந்தவர் சரவணக்குமார் (40). இவர் தேனியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சரவணக்குமாரை தடுத்து நிறுத்தி தற்கொலை முயற்சியில் இருந்து மீட்டனர்.
பின்னர் அவரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், தனக்குச் சொந்தமான ஒரு சென்ட் காலி இடத்தை ஆக்கிரமிப்பு செய்த தனிநபர் மீது காவல்நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆட்சியர் உள்பட பலரிடம் புகார் அளித்தும் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்காததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தேனி நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இடத்தை ஆக்கிரமித்தவர் மீது நடவடிக்கை கோரி தற்கொலை முயற்சி - பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி
தேனி: இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் பாதிக்கப்பட்டவர் ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.