ETV Bharat / state

ஜெயலலிதா உடன் இருந்தவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் - ஓபிஎஸ் குரலாக ஒலித்த சையது கான்...

author img

By

Published : Jun 20, 2022, 8:07 AM IST

Updated : Jun 20, 2022, 8:52 AM IST

ஜெயலலிதா உடன் இருந்தவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் தெரிவித்துள்ளார். கட்சி தலைமை விவகாரத்தில் தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜெயலலிதா உடன் இருந்தவர்கள் எல்லாம் மீண்டும் இணைக்க வேண்டும் - ஓபிஎஸ் குரலாக ஒலித்த சைய்யது கான்...

தேனி: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உட்கட்சி மோதல் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள சூழலில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளில் சிலர் சென்னையில் பசுமை வழிச்சாலையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்த சம்பவம் தேனி மாவட்ட அதிமுகவினரிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் உடனடியாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளை அழைத்து ஓபிஎஸ்க்கு சொந்தமான கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் திடீர் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சையது கான், "எடப்பாடி பழனிசாமியை சந்தித்தவர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்கள் தான். பொறுப்பில் உள்ள 2 பேர் மட்டுமே அவரை சந்தித்து உள்ளதாகவும், கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதும், தற்போது உள்ள நிலை தொடர வேண்டும் என்பதே தேனி மாவட்ட நிர்வாகிகளின் எண்ணமாக உள்ளது" என்று தெரிவித்தார்.

ஜெயலலிதா உடன் இருந்தவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் - ஓபிஎஸ் குரலாக ஒலித்த சையது கான்...

தொடர்ந்து பேசிய அவர், தேனி மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஓபிஎஸ்க்கு ஆதரவாக உள்ளதாகவும், ஜெயலலிதா தலைமையை ஏற்று தற்போது கட்சியை விட்டு பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் கட்சியில் இனைந்து ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்" என தெரிவித்தார். இந்த கூட்டத்தில் சமீபத்தில் கட்சியை விட்டு நீக்கப்பட்ட ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் முடிந்ததும் எடப்பாடி பழனிசாமி ஒழிக, துரோகி எடப்பாடி பழனிசாமி என்றும், கோஷங்களை எழுப்பியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி, தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான், சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி ஓபிஎஸ்க்கு சொந்தமான கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் தீர்மானம் நிறைவேற்றினர்.

மேலும், சசிகலா, தினகரன் ஆகியோரை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்பது தன்னுடைய தனிப்பட்ட கருத்து அல்ல, தேனி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் இருக்கிற அதிமுகவில் உள்ள ஒவ்வொரு அடிமட்ட நிர்வாகிகளின் விருப்பமும் அதுதான்" என்று தெரிவித்தவர் சையது கான். தற்போது, கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால், ஜெயலலிதா உடன் இருந்தவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உச்சகட்டத்தில் அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் - வெல்லப்போவது யார்..?

Last Updated : Jun 20, 2022, 8:52 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.