ETV Bharat / state

தேனி மாவட்ட அதிமுக அலுவலகக் கட்டடம் யாருக்குச் சொந்தம்? - அமமுக

தேனி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பதற்கு முன்னாள் கட்டப்பட்ட  மாவட்ட அதிமுக அலுவலகக் கட்டடம் யாருக்குச் சொந்தம் என கேள்வி எழுப்பி அதிமுக, அமமுக கட்சியினர் பெரியகுளம் கோட்டாட்சியரிடம் முறையிட்டனர்.

issues
author img

By

Published : Aug 14, 2019, 6:42 AM IST

தேனி அருகே உள்ள ஆர்எம்டிசி காலணி எதிர்புறம் அதிமுக மாவட்டத் தலைமை அலுவலகம் கடந்த 2016ஆம் ஆண்டு காணொளி காட்சி வாயிலாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது.

கொச்சின்-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இக்கட்டடம், ஜெயலலிதாவிடம் உறவினராக இருந்த பூங்குன்றன் என்பவரது பெயரில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக அதிமுக, அமமுகவினரிடையே இந்த கட்டடம் யாருக்குச் சொந்தம் என போட்டிகள் நிலவியது.

அதிமுக அலுவலகக் கட்டடம் யாருக்குச் சொந்தம்?

இதனையடுத்து பூங்குன்றன் என்பவர் தினகரனின் ஆதரவாளர் என கூறப்பட்டதால், இந்த கட்டடத்தை அமமுகவினரே தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். அதிமுக ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழக அலுவலகத்தை கைப்பற்றினார். ஆனால் தனது சொந்த ஊரான தேனியில் உள்ள மாவட்ட கழக அலுவகத்திற்கு செல்ல முடியவில்லை. அமமுகவில் தங்க தமிழ்செல்வன் இருந்த வரையில் இந்த கட்டடத்தை கட்சி அலுவலக பணிகளுக்கு அவர் பயன்படுத்தி வந்தார். எனினும் எம்ஜிஆர், ஜெயலிலதா ஆகியோரின் பிறந்தநாள், நினைவுநாள் என முக்கிய நிகழ்வுகளில் இக்கட்டடம் களையிழந்தே காணப்பட்டது.

அதன் பின்னர், திமுகவில் தங்கதமிழ்செல்வன் ஐக்கியமான பிறகு, இந்த அலுவலகக் கட்டடம் முற்றிலும் களையிழக்க ஆரம்பித்தது. இதனைப் பயன்படுத்தி தற்போது அதிமுக இக்கட்டடத்தை கைப்பற்றிக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பந்தபட்ட கட்டடம் தங்களுக்குச் சொந்தமென பெரியகுளம் கோட்டாட்சியரிடம் அதிமுக, அமமுக நிர்வாகிகள் முறையிட்டுள்ளனர். அலுவக கட்டடம் தங்களுக்கு சொந்தம் என்பதற்கான ஆவணங்களை அமமுகவினர் சமர்ப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுக சார்பில் கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த கோட்டாட்சியர் ஜெயப்பிரதா மீண்டும் விசாரணைக்கு தேதி குறிப்பிடாமல், விரைவில் தேதி அறிவிப்பதாகக் கூறி ஒத்தி வைத்தார்.

Intro: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் கட்டப்பட்ட தேனி மாவட்ட அதிமுக அலுவலகக் கட்டிடம் யாருக்குச் சொந்தம்? அதிமுக, அமுமுக கட்சியினர் பெரியகுளம் கோட்டாட்சியரிடம் முறையீடு.         
Body: தேனி அருகே உள்ள ஆர்.எம்.டி.சி. காலணி எதிர்புறம் அதிமுக மாவட்டத் தலைமை அலுவலகம் கடந்த 2016ஆம் ஆண்டு காணொளி காட்சி வாயிலாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டன. கொச்சின் - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இக்கட்டிடம்; ஜெயலலிதாவிடம் உறவினராக இருந்த பூங்குன்றன் என்பவரது பெயரில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் மறைவிற்குப்பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக அதிமுக, அமமுகவினரிடையே இந்த கட்டிடம் யாருக்குச் சொந்தம் என போட்டிகள் நிலவியது. இதனையடுத்து பூங்குன்றன் என்பவர் தினகரனின் ஆதரவாளர் என கூறப்பட்டதால் இந்த கட்டிடத்தை அமமுகவினரே தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழக அலுவலகத்தை கைப்பற்றினர். ஆனால் தனது சொந்த ஊரான தேனியில் உள்ள மாவட்;ட கழக அலுவகத்திற்கு செல்ல முடியவில்லை. இதற்கு மாறாக அமமுகவில் தங்க தமிழ்செல்வன் இருந்த வரையில்; இந்த கட்டிடத்தை கட்சி அலுவல் ரீதியாக அவர் பயன்படுத்தி வந்தார்.
எனினும் எம்.ஜி.ஆர், ஜெயலிலதா ஆகியோரின் பிறந்தநாள், நினைவுநாள் என முக்கிய நிகழ்வுகளில் இக்கட்டிடம் களையிழந்தே காணப்பட்டன. இதனையடுத்து திமுகவில் தங்கதமிழ்செல்வன் ஐக்கியமான பிறகு, இந்த அலுவலகக்கட்டிடம் முற்றிலும் களையிழக்க ஆரம்பித்தன.
இதனைப் பயன்படுத்தி தற்போது அதிமுக இக்கட்டிடத்தை கைப்பற்றிக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பந்தபட்ட கட்டிடம் தங்களுக்குச் சொந்தமென பெரியகுளம் கோட்டாட்சியரிடம் அதிமுக, அமமுக நிர்வாகிகள் முறையிட்;டுள்ளனர்.
அதில் சம்பந்த அலுவக கட்டிடம் தங்களுக்கு சொந்தம் என்பதற்கான ஆவணங்களை அமமுகவினர் சமர்ப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுக சார்பில் கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த கோட்டாட்சியர் ஜெயப்பிரிதா மீண்டும் விசாரணைக்கு தேதி குறிப்பிடாமல், விரைவில்; தேதி அறிவிப்பதாகக் கூறி ஒத்தி வைத்தார்.
Conclusion: இதனிடையே சம்பந்தப்பட்ட கட்டிடத்தை வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கைப்பற்றப்போவதாக சமூக வலைதளங்;களில் தகவல்களும் வேகமாக பரவி வருகின்றது. இதனால் அன்றைய தினம் தேனி மாவட்ட அதிமுக, அமமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.