ETV Bharat / state

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: வெங்கடேஷுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு! - மருத்துவர் வெங்கடேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவன் உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேஷுக்கு மேலும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Dr Venkatesh NEET impersonation case
author img

By

Published : Oct 24, 2019, 5:59 PM IST

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த மாணவன் உதித்சூர்யா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் அமைத்த விசாரணைக் குழுவில் ஆள்மாறாட்டம் மோசடி உறுதியானதை அடுத்து மாணவர் உதித்சூர்யா குடும்பத்துடன் தலைமறைவானர்.

இந்த வழக்கை தனிப்படை காவல் துறையினர் விசாரணை செய்துவந்த நிலையில், பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி ஆந்திர மாநிலம் கீழ் திருப்பதியில் தலைமறைவாக இருந்த மாணவன் உதித்சூர்யா, அவரது தந்தை மருத்துவர் வெங்கடேஷ் கைது செய்யப்பட்டு தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது.

சிபிசிஐடி காவல் ஆணையர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, உதித்சூர்யா, அவரது தந்தை மருத்துவர் வெங்கடேஷ் ஆகியோரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்து, கூட்டுச்சதி, ஆவணங்களைத் திருத்தி மோசடி செய்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, உதித்சூர்யாவிற்கு மட்டும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிணை அளித்தது. இந்நிலையில், வெங்கடேஷுக்கு நீதிமன்றக் காவல் முடிந்து இரண்டாவது முறையாக இன்று தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மருத்துவர் வெங்கடேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், மேலும் 15 நாள் நீதிமன்றக் காவலை நீட்டித்து நவம்பர் 7ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்பின், மருத்துவர் வெங்கடேஷை மதுரை மத்திய சிறையில் அடைப்பதற்கு காவல் துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க:நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: 8 பேரின் பிணை மனு தள்ளுபடி

Intro: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.
வரும் நவம்பர் 7ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு.

Body: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவன் இதில் சூர்யா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் அமைத்த விசாரணைக் கமிட்டியில் ஆள்மாறாட்டம் மோசடி உறுதியானதை அடுத்து மாணவர் உதித்சூர்யா குடும்பத்துடன் தலைமறைவாகினர்.
தனிப்படை போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், பின் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி ஆந்திர மாநிலம் கீழ் திருப்பதியில் வைத்து தலைமறைவாக இருந்த மாணவர் உதித்சூர்யா அவரது தந்தையான மருத்துவர் வெங்கடேஷ் கைது செய்யப்பட்டு தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. சிபிசிஐடி எஸ்.பி விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து உதித்சூர்யா அவரது தந்தை வெங்கடேஷ் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து, கூட்டுச்சதி, ஆவணங்களை திருத்தி மோசடிசெய்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே உதித்சூர்யாவிற்கு மட்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஜாமீன் அளித்தது.
இந்நிலையில் வெங்கடேசனுக்கு நீதிமன்ற காவல் முடிந்து இரண்டாவது முறையாக இன்று தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், மேலும் 15 நாள் நீதிமன்றக் காவலை நீட்டித்து வரும் நவம்பர் ஏழாம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Conclusion: இதனை அடுத்து மதுரை மத்திய சிறையில் அடைப்பதற்கு மருத்துவர் வெங்கடேசனை பாதுகாப்புடன் போலீசார் அழைத்துச் சென்றனர்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.