தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர், உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் கிளார்க், கம்பம் அரசு மருத்துவமனை ஆய்வகப் பணியாளர் உள்பட இன்று (ஆக. 17) ஒரே நாளில் 279 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 189 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கண்டமனூரைச் சேர்ந்த 43 வயதுடைய நபர், பெரியகுளம் எ.புதுப்பட்டியை சேர்ந்த 65 வயது முதியவர், வைகை புதூர் கே.கே.நகரைச் சேர்ந்த 45 வயது நபர், தேனி சுக்குவாடன்பட்டியைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி, சின்னமனூர் புலிக்குத்தியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர், தேனி பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர், 68 வயது மூதாட்டி என இன்று (ஆக.17) ஒரே நாளில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 173ஆக அதிகரித்துள்ளது.
மேலும்,தேனி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது வரை 7 ஆயிரத்து 160 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 ஆயிரத்து 913 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.