ETV Bharat / state

தேனியில் 15 குழந்தைகள் உள்பட 175 பேருக்கு தொற்று உறுதி

தேனி : 15 குழந்தைகள் உள்பட 175 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கரோனா தொற்றால் ஒரே நாளில் 4 முதியவர்கள் உயிரிழந்தனர்.

Theni Corona Latest Update
Theni Corona Latest Update
author img

By

Published : Jul 18, 2020, 6:55 AM IST

கரோனா வைரஸ் பரவல் தேனி மாவட்டத்தில் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் உயிரிழப்பும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், மாவட்டத்தில் 15 குழந்தைகள் உள்பட ஒரே நாளில் 175 நபர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,229ஆக அதிகரித்துள்ளது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்களில் ஒரே நாளில் நான்கு முதியவர்கள் உயிரிழந்தனர். தேனி சுப்பன் தெருவை 70 வயது மூதாட்டி, கம்பத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர், உத்தமபாளையம் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த 74 வயது முதியவர் மற்றும் ஆண்டிபட்டியைச் சேர்ந்த 68 வயது முதியவர் என நான்கு நபர்கள் உயிரிழந்தனர். இதனால் தேனி மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது.

நோய்த் தொற்று கண்டறியப்பட்டவர்களில் பெரியகுளம், தேனி, போடியைச் சேர்ந்தவர்களே அதிகம். ஆண்டிபட்டியில் 9 பேர், க.மயிலாடும்பாறையில் ஒரு நபர், உத்தமபாளையத்தில் 16 பேர், சின்னமனூரில் 19 பேர், கம்பத்தில் 29 பேர், போடியில் 32 பேர், தேனியில் 34 பேர் மற்றும் பெரியகுளத்தில் 35 பேர் என மொத்தம்175 நபர்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், நோய்த் தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வருகை புரிந்தவர்கள் என 671 நபர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தேனியில் தற்போது வரை கரோனா நோய்த் தொற்றால் 2,229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 883 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,320 நபர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர். தொடர்ந்து அதிரிக்கும் கரோனா நோய்த் தொற்று தேனி மாவட்ட மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.