தமிழ் நாட்டில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு சில நாட்களே உள்ள நிலையில், போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க, கிராம மக்களைக் கவரும் வகையில் திமுகவினர், அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் போல் வேடமணிந்து வீதி வீதியாகச் சென்று பரப்புரை மேற்கொண்டனர்.
ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் மகாராஜன் தலைமையில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி தலைவர்கள் வேடமணிந்து வேட்பாளர்களை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர்.
இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தல் பரப்புரை: குத்தாட்டம் போட்ட அமைச்சர் கருப்பணன்!