தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்குபட்ட கண்டமனூர் வனச்சரகத்தில் மான், கரடி, செந்நாய் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் வசித்துவருகின்றன.
இந்நிலையில், கடமலைக்குண்டு அருகே உள்ள தர்மராஜபுரம் வனப்பகுதியில் வைகை நகரைச் சேர்ந்த முதியவர் வனராஜா (65) என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் சுற்றித்திரிந்த கரடி ஒன்று வனராஜாவை கடித்து குதறியுள்ளது.
இதில், இடதுபக்க தாடை, தலை, மார்பு உள்ளிட்ட இடங்களில் பலத்தக் காயம் அடைந்த முதியவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுதொடர்பாக கடமலைக்குண்டு காவல் துறையினர், கண்டமனூர் வனத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா நோய்க் கிருமியை எதிர்த்து போராட இலாமா ஆடுவகையின் ஆண்டிபாடீஸ் உதவுமா?