ETV Bharat / state

இருசக்கர வாகனங்களும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து - இருவர் பலி - தேனி

தேனி: கம்பம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள், பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே இருவர் பலியாயினர்.

Road Accident
author img

By

Published : Aug 4, 2019, 1:39 AM IST

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த கதிர்வேல் என்பவர் இருசக்கர வாகனத்தில் தேனி மாவட்டம் கம்பம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, கம்பம் எல்லைப் பகுதியின் வலது புறம் திடீரென வாகனத்தை திருப்புகையில், எதிர்பாராதவிதமாக தம்பதியினர் வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் மோதி நிலை தடுமாறியது. அதே நேரத்தில், எதிரே வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து மீது, இரண்டு இருசக்கர வாகனங்களும் பயங்கரமாக மோதின.

இருசக்கர வாகனங்களும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து

இந்த கோர விபத்தில் பேருந்தின் முன்பகுதியில் அமர்ந்திருந்த டிக்கெட் பரிசோதகர் விஜயன் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலே பலியானார். மேலும் இரு சக்கர வாகனத்தில் வந்த தம்பதியினரில், கணவர் சம்பவ இடத்திலே பலியானார்.

இவரது மனைவி, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த கதிர்வேல் ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடம் சென்ற கம்பம் போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro: தேனி மாவட்டம் கம்பம் அருகே இருசக்கர வாகனங்களும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி. மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதி.
Body: தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து இன்று மாலை தனியார் பேருந்து ஒன்று தேனியை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே உசிலம்பட்டியை சேரந்த கதிர்வேல் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். கம்பம் எல்லைப்பகுதியில் நுழையும் போது தனது வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக சாலையின் வலது புறம் திடீரென திரும்பியுள்ளார், இதில் அவருக்கு பின்னார் வந்த இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதிகள் வாகனமும் இவரது வாகனமும் மோதி நிலை தடுமாறி எதிரே வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து மீது இரண்டு இருசக்கர வாகனங்களும் பயங்கரமாக மோதியது.
இதில் பேருந்தின் முன்பகுதியில் அமர்ந்திருந்த டிக்கெட் பரிசோதகரான தேக்கம்பட்டியை சேர்ந்த விஜயன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே பலியானார். மேலும் இரு சக்கர வாகனத்தில் மனைவியுடன் வந்த ஒருவர் என மொத்தம் இரண்டு பேர் சம்பவ இடத்திலே பலியாகினர். இவ்விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த உசிலம்பட்டியை சேரந்த கதிர்வேல் மற்றும் கணவனுடன் வந்த பெண்னும் பலத்த காயங்களுடன் தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் - மனைவி யார் என்பது குறித்து உத்தமபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Conclusion: தனியார் பேருந்து அதிவேகமாக வராமல் இருந்திருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது என்று விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.