ETV Bharat / state

'எந்த சின்னம் கிடைத்தாலும் அமமுக வெற்றி பெறும்' - தங்க தமிழ்செல்வன்!

தேனி: "தேர்தலில் எந்த சின்னம் கிடைத்தாலும் அமமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்" என்று, அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ் செல்வன் தெரிவித்தார்.

author img

By

Published : Mar 26, 2019, 7:16 PM IST

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக தேனி பங்களாமேடு பகுதியிலிருந்து தங்கதமிழ்செல்வன் கட்சியினருடன் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர், மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பல்லவி பல்தேவிடம் தனது வேட்பு மனுவை தங்க தமிழ் செல்வன் தாக்கல் செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் தங்க தமிழ் செல்வன் கூறுகையில், "உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் குக்கர் சின்னம் கிடைக்கவில்லை. எந்த சின்னம் கொடுத்தாலும் அது மக்களிடையே பிரபலம் அடையும். அதிமுக ஆட்சி காலத்தில் தேனி மாவட்டத்திற்கான ரயில்வே திட்டத்தை கொண்டு வரவில்லை. எங்களுக்கு அதிமுக போட்டி கிடையாது, காங்கிரசுக்கும் அமமுகவிற்கும்தான் போட்டி. அண்ணன் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெரிய மனிதர். மரியாதையாக பேசுகிறார். என்னுடைய நடை, உடை, பாவனை நன்றாக உள்ளது என்று கூறிய அவருக்கு என்னுடைய நன்றி. அவரும் என்னை போல் ஒரு எதார்த்தமான மனிதர்தான்", என்றார்.

தங்க தமிழ்செல்வன்

Intro: தேர்தலில் எந்த சின்னம் கிடைத்தாலும் அமமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும், தேனியில் வேட்புமனு தாக்கல் செய்த பின், தங்க தமிழ் செல்வன் பேட்டி.

Body: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக தேனி பங்களாமேடு பகுதியிலிருந்து தங்கதமிழ்செல்வன் பெரியகுளம், ஆண்டிபட்டி சட்ட மன்ற தொகுதி வேட்பாளர்கள் அமோக வெற்றி வேட்பாளர் விஜயகுமார் கதிர்காமு, ஜெயக்குமார் ஆகியோர் ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலத்தில் எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பல்லவி பல்தேவிடம் தனது வேட்பு மனுவை தங்க தமிழ் செல்வன் தாக்கல் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் குக்கர் சின்னம் கிடைக்கவில்லை. எந்த சின்னம் கொடுத்தாலும் அது மக்களிடையே பிரபலம் அடையும். அனைத்து தொகுதிகளிலும் நடக்கின்ற தேர்தல் தர்மத்திற்கும், துரோகத்திற்குமான தேர்தல். இதில் தர்மம் வெல்லும்.
அதிமுக ஆட்சி காலத்தில் தேனி மாவட்டத்திற்கான ரயில்வே திட்டத்தை கொண்டு வரவில்லை. எங்களுக்கு அதிமுக போட்டி கிடையாது, காங்கிரசுக்கும் அமமுகவிற்கும் தான் போட்டி. அண்ணன் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெரிய மனிதர் வீட்டு குடும்பத்திலிருந்து வந்தவர், மரியாதையாக பேசுகிறார் என்னுடைய நடை, உடை, பாவனை நன்றாக உள்ளது என்று கூறிய அவருக்கு என்னுடைய நன்றி அவரும் என்னை போல் ஒரு எதார்த்தமான மனிதர்தான் என்று தெரிவித்தார்.

Conclusion: இந்நிகழ்வில் உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ மகேந்திரன் உள்பட அமமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி : தங்க தமிழ் செல்வன் (தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர், அமமுக)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.