தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தும், அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வனும், திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும் களம் காண்கின்றனர். ரவீந்திரநாத்துக்கும், தங்க தமிழ்ச்செல்வனுக்கும்தான் நேரடி போட்டி இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், தேனி மாவட்டம் வலையப்பட்டியில் தங்க தமிழ்ச்செல்வன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அதிமுகவில் இருந்தபோது எனக்கு தேர்தல் பணி செய்யாத சுயநலவாதி. தேனி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் மகன் போட்டியிடுவதால் அவரது குடும்பமே தேர்தல் பணி செய்கிறது” என்றார்.