ETV Bharat / state

மதுபோதையில் டீ மாஸ்டரை அடித்தேகொன்ற இளைஞருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை!

author img

By

Published : Mar 2, 2021, 2:29 AM IST

தேனி: மது போதையில் ஏற்பட்ட தகராறு டீ மாஸ்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விடுத்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

tea-master-murdered-in-alcohol-dispute-10-years-rigorous-imprisonment-for-the-culprit

தேனி மாவட்டம் கம்பம் நந்தகோபால் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் ( 40).‌ டீ மாஸ்டரான இவர், கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான மகேந்திரனுடன் கம்பம் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபானக் கடையில் மது அருந்தியுள்ளார்.

அப்போது அருகில் கம்பம் சுக்காங்கல்பட்டி தெருவைச் சேர்ந்த முகமது அல்கசிப் (22), கம்பம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தெருவைச் சேர்ந்த அரவிந்த் (22), மணிகண்டன் (23) ஆகிய மூவரும் டீ மாஸ்டர் மணிகண்டனிடம் தண்ணீர் பாட்டில் வாங்கி வரும்படி கூறியுள்ளனர். அதற்கு டீ மாஸ்டர் மணிகண்டன் மறுக்கவே, ஆத்திரமடைந்த மூவரும் சேர்ந்து மணிகண்டன், அவரது நண்பர் மகேந்திரன் ஆகிய இருவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த மணிகண்டன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய கம்பம் வடக்கு காவல்துறையினர், முகமது அல்கசிப், அரவிந்த், மணிகண்டன் ஆகிய 3 பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இந்த வழக்கின் விசாரணையானது, தேனி மாவட்ட கூடுதல் அமர்வு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற இறுதி விசாரணையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் வழக்கின் முதல் குற்றவாளியான முகமது அல்கசிப்பிற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக மூன்று மாத காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது..

அதேபோல, இவ்வழக்கின் இரண்டாவது குற்றவாளி அரவிந்த், மூன்றாவது குற்றவாளி மணிகண்டன் ஆகிய இருவர் விடுதலை செய்யப்பட்டனர். 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்ற முகமது அல்கசிப்பை, மதுரை மத்திய சிறையில் அடைக்க தகுந்த பாதுகாப்புடன் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க:கடலூரில் தாய், மகள் கொலை: உடல் பாகங்களை வெட்டி வீசிய கொடூரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.