கேரளா மாநிலம் இடுக்கி, தமிழகத்தில் தேனி மாவட்டம் போடிமெட்டு, கம்பம் மெட்டு ஆகியப் பகுதிகளில் ஏலக்காய் சாகுபடி அதிகம் நடைபெறும். இந்திய நறுமன வாரியம் சார்பில், கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள புற்றடி பகுதியிலும், தேனியில் போடிநாயக்கனூர் பகுதிகளில் ஏலக்காய் வர்த்தகத்திற்கான ஏல மையம் செயல்படுகிறது.
தமிழகத்தில் போடியிலுள்ள ஏலக்காய் ஏல மையத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 40 ஆயிரம் கிலோ வரை ஏலம் நடைபெறும். இதில் பங்கேற்க கேரளாவிலிருந்து வியாபாரிகள் வருவது வழக்கம். இந்நிலையில், கேரளாவில் 22 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால், நறுமண வாரியத்திற்கு வரும் கேரள வியாபாரிகளால் கொரோனா வைரஸ் எளிதில் பரவக்கூடிய நிலை இருப்பதாகக் கூறி, தமிழ்நாடு ஏல வியாபாரிகள் 60 சதவீதத்திற்கு மேற்பட்டோர் நேற்று நடைபெற்ற ஏலத்தை புறக்கணித்தனர்.
இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட விரைந்த ஏல மையத்துக்கு சுகாதார குழுக்கள் அங்கிருந்த கேரளா விவசாயிகள், வியாபாரிகளிடம் பரிசோதனை நடத்தினர். மேலும், அவர்களின் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இருப்பினும் தமிழ்நாடு வியாபாரிகள் வெளிநடப்பு செய்ததால், 20 விழுக்காடு வியாபாரிகளை வைத்து ஏலம் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்த காரணத்தினால் ஏலக்காய் விலை 400 ரூபாய்க்கு குறைந்து ஒரு கிலோ 2,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருவள்ளூரில் ஒரு ரூபாய் பிரியாணி - அலைமோதிய மக்கள் கூட்டம்!