ETV Bharat / state

சுருளி அருவியில் நுழைவுக்கட்டணம் உயர்வு: சிபிஎம் ஆர்ப்பாட்டம்! - தேனி

தேனி: சுருளி அருவியில் நுழைவுக்கட்டண உயர்வை கண்டித்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கம்பம் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

protest
author img

By

Published : Aug 13, 2019, 7:26 AM IST

தேனி மாவட்டம் மேகமலை வன உயிரின சரணாலயத்திற்குட்பட்ட சுருளி அருவியில் வனத்துறை சார்பில் ரூ.5 நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்த நுழைவுக் கட்டணத்தை தற்போது உயர்த்துவதற்கு வனத்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த புதிய அறிவிப்பில் குழந்தைகளுக்கு ரூ.20, பெரியவர்களுக்கு ரூ.30, புகைப்படம் எடுக்க ரூ.50, வீடியோ எடுப்பதற்கு ரூ.300 வரை வசூலிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டன. வனத்துறையின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சுருளி அருவியில் நுழைவுக்கட்டணம் உயர்வு: சிபிஎம் ஆர்ப்பாட்டம்!

பெரியகுளம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் லாசர் தலைமையில், கம்பம் காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக சென்ற மார்க்சிஸ்ட் கட்சியினர், வனச்சரக அலுவகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, புதிய கட்டண உயர்வை கண்டித்து முழக்கங்கள் எழுப்பியவாறு வனச்சரக அலுவகத்தை முற்றுகையிட்டனர்.

Intro:         சுருளி அருவியின் நுழைவுக்கட்டண உயர்வை கண்டித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கம்பம் வனச்சரக அலுவலகம் முற்றுகை.
Body:          தேனி மாவட்டம் கம்பம் அருகே அமைந்துள்ளது சுருளி அருவி. ஹைவேவிஸ், மேகமலைப்பகுதியில் உள்ள துவானம் அணையிலிருந்து வரும் தண்ணீர் மற்றும் ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீர் அருவிக்கு வருவதால் குளிர்ச்சியாகவும், மூலிகைத்தன்மை வாய்ந்ததாகவும் இருப்பதால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதுன்டு. மேலும் இறந்தவர்களின் தர்ப்பனம், ஆடி, தை அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பனம் கொடுப்பதற்காகவும் சுருளி அருவிக்கு ஏராளமானோர் வந்து செல்வதுன்டு. மேகமலை வன உயிரின சரணாலயத்திற்குட்பட்ட இந்த அருவியில் வனத்துறை சார்பில் ரூ.5 நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தன.
         இந்நிலையில் இந்த நுழைவுக் கட்டணத்தை தற்போது உயர்த்துவதற்கு வனத்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த புதிய அறிவிப்பில் குழந்தைகளுக்கு ரூ.20, பெரியவர்களுக்கு ரூ.30, புகைப்படம் எடுக்க ரூ.50 மற்றும் வீடியோ எடுப்பதற்கு ரூ.300 வரை வசூலிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டன. வனத்துறையின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த கட்டண உயர்வை கண்டித்து இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
         பெரியகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லாசர் தலைமையில், கம்பம் காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக சென்ற மார்க்சிஸ்ட் கட்சியினர் வனச்சரக அலுவகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் புதிய கட்டண உயர்வை கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பியவாறு வனச்சரக அலுவகத்தை முற்றுகையிட்டனர். அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தற்காலிகமாக கலைந்து சென்றனர்.
Conclusion: மேலும் புதிய கட்டண உயர்வை திரும்ப பெறவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என எச்சரித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.