தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜமீன்தார் காம்ப்ளக்சில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் இன்று காலை ஏ.டி.எம் அறையில் உள்ள ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. கண் இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவியது. இதில் அறையில் இருந்த இரண்டு ஏ.டி.எம் இயந்திரங்கள் முழுவதும் தீப்பற்றி எரிந்தன.
இந்த சம்பவம் குறித்து தேனி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் ஏ.டி.எம் இயந்திரம் முழுவதுமாக எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்தால் இயந்திரத்தில் உள்ள பணத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்றும், மேலும் தொழில்நுட்ப வல்லுநர்களை வரவழைத்து இயந்திரத்தில் உள்ள பணத்தை மீட்டு, எவ்வளவு பணம் உள்ளே உள்ளது என்பது குறித்த தகவல்கள் தெரிய வரும் என வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:
கேரளாவிற்கு மணல் கடத்திய ஏழு லாரிகள் பறிமுதல்: கனிம வளத்துறையினர் நடவடிக்கை