தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே அமைந்துள்ளது மஞ்சளாறு அணை. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள தமிழ்நாட்டின் இரண்டாவது உயரமான அருவி, தலையாறு அருவி. அந்த அருவி மஞ்சளாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதியாகும்.
கோடைக்காலத்தின் தொடக்கத்திலிருந்தே போதியளவு மழை இல்லாததால் அருவி வறண்டு, மஞ்சளாறு அணையின் நீர்வரத்தும் நின்று போனது. இந்நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் மூன்று மாதங்களுக்குப் பிறகு வறண்டிருந்த தலையாறு அருவியில் நீர்வரத்து தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக தற்போது மஞ்சளாறு அணைக்கும் விநாடிக்கு 10 கன அடி நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.