தேனி: போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் 'அடுத்த தலைமுறைக்கான கல்லூரி நூலகம்' என்னும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியும், சூரிய சக்தி மின்கலங்களின் சமீபத்திய போக்குகள் குறித்த கருத்தரங்கமும் நேற்று (ஜன 13) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் எஸ்.வி. சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
இதில், இன்றைய தலைமுறைக்கு ஏற்ப நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கல்லூரி நூலகத்தை மாற்றுவது குறித்து விளக்கப்பட்டது. அப்போது, பெங்களூரு பிராட்ரிட்ஜ் நிறுவனம் மற்றும் வடுகபட்டி ஹனிகிங்ஸ் அறக்கட்டளை நிா்வாகிகள் சார்பில் கல்லூரி நூலகத்துக்கு 15 மடிக்கணினிகள் விலையில்லாமல் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி செயலா் ஆா். புருசோத்தமன், உதவித் தலைவா் எஸ். ராமநாதன், நிா்வாகக்குழு உறுப்பினா்கள் கமலநாதன், ராஜேந்திரன் ஆகியோா் பேசினா்.
ஹனிகிங்ஸ் அறக்கட்டளை நிர்வாகிகளான ராஜாராம், ரமேஷ், மணிகண்டன் ஆகியோரும் கல்லூரியின் முன்னாள் மாணவரும் பிராட்ரிட்ஜ் பைனான்சியல் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் டெக்னாலஜி ஆர்க்கிடெக்ட்டும் ஆன சத்திய சுந்தரம் செல்லராமசாமியும் கலந்துகொண்டனர். இதில் கல்லூரி முதல்வா் எஸ்.சிவக்குமாா் வரவேற்புரையும், கல்லூரி நூலகா் ஜி.மங்கை நன்றி உரையும் நவிழ்ந்தனர்.
இதையும் படிங்க: Pongal greetings: ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் பொங்கல் வாழ்த்து