ETV Bharat / state

ஆண்டிப்பட்டியில் அடிப்படை வசதிகள் கோரி ஆர்ப்பாட்டம் - அடிப்படை வசதிகள் கோரி ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

தேனி: குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Siege of Andipatti Panchayat Union office demanding basic amenities

author img

By

Published : Dec 11, 2020, 10:26 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியம், டி.சுப்புலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 8ஆவது வார்டு எம்ஜிஆர் நகர் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து அவர்களிடம் ஆண்டிப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவர் லோகிராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில் சம்பந்தபட்ட பகுதியில் அனைத்து வசதிகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.