தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி புதுக் காலணியைச் சேர்ந்தவர் செந்தில் (37). இவர் 2013ஆம் ஆண்டு அதே பகுதியில் வசித்துவரும் மனநலம் குன்றிய பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து பெண்ணின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த இராஜதானி காவல் துறையினர் செந்திலைக் கைதுசெய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், தேனி மகிளா நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 31) தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த செந்திலுக்கு 10 வருட கடுங்காவல் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும், தொகையைச் செலுத்த தவறினால் கூடுதலாக ஓர் ஆண்டு சிறை தண்டனையும் விதித்து மகிளா நீதிபதி கீதா தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடாக ஐந்து லட்சம் ரூபாய் வழங்க மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து மதுரை மத்திய சிறைக்கு குற்றவாளி அழைத்துச் செல்லப்பட்டார்.