தேனி: தமிழ்நாடு கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ளது முல்லை பெரியாறு அணை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் விவசாய மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது முல்லை பெரியாறு அணை.
முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணையின் நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் 152 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியது.
இதனால் தமிழ்நாடு பொதுப்பணித்துறை சார்பில் கேரள பகுதி கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இன்று (டிச. 14) காலை நிலவரப்படி அணையின் நீர்வரத்து 1,166 கனஅடி ஆகவும் அணையின் உபரிநீர் வெளியேற்றம் 511 கனஅடி ஆகவும் இருந்து வருகிறது.
முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியதை தொடர்ந்து கேரள பகுதி மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவை குற்றாலத்திற்கு செல்லத் தடை - வனத்துறை