தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கிருமி நாசினி சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நேற்றிரவு முதல் நடைபெற்று இன்று காலை பயன்பாட்டிற்கு வந்து செயல்படத் தொடங்கியது.
இந்நிலையில் இது போன்ற கிருமி நாசினி மனிதர்கள் மீது தெளிப்பதால் கண் எரிச்சல், சரும பிரச்னை, உடல் உபாதைகளை ஏற்படுத்துவதாக மக்கள் கூறியதால் சுகாதாரத் துறை அதனை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பல இடங்களில் செயல்பட்டு வந்த கிருமி நாசினி சுரங்கப் பாதைகளை நிறுத்தி வைத்தனர். இதனிடையே நேற்று பெரியகுளம் தென்கரை பெருமாள் கோவில் பகுதியில் காலை கிருமி நாசினி சுரங்கப் பாதை செயல்படத் தொடங்கப்பட்ட சில மணி நேரத்திலேயே நிறுத்தப்பட்டது.