ETV Bharat / state

சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் ஆடி சனிவாரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தேனி: குச்சனூரில் உள்ள சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடி சனிவாரத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

சுயம்பு சனீஸ்வர பகவான்
author img

By

Published : Jul 20, 2019, 3:10 PM IST

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது குச்சனூர் கிராமம். தமிழகத்தில் திருநள்ளாறுக்குப் பிறகு, குச்சனூரில் தான் சனீஸ்வரருக்கு ஆலயம் உள்ளது. இங்குள்ள சுரபி நதிக்கரையில் சுயம்புவாக சாந்த சொரூபனாக பக்தர்களுக்கு காட்சி அளித்துவருகிறார் சனீஸ்வரர்.

இதனால் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வழிபட்டு செல்கின்றனர். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாத சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறும். இந்தாண்டிற்கான ஆடி சனி வாரத் திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

கோயில் பிரகாரத்தில் உள்ள கொடிமரத்துக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புனித நீரை கொண்டு, கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு காக்கை உருவம் பதித்த கருநீல கொடி ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றன. பக்தர்கள் எள் தீபம் ஏற்றியும், காகம் உருவம் பதித்த பொம்மைகள், பொறி உள்ளிட்டவைகளையும் படைத்து வழிபட்டனர்.

சுயம்பு சனீஸ்வர பகவான்

இன்று தொடங்கிய திருவிழா ஆடி மாதத்தில் உள்ள அனைத்து சனிக்கிழமைகளிலும் நடைபெறும். மூன்றாவது சனிக்கிழமையன்று நீலாதேவி - சனீஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அதிகமாக வந்து செல்லும் பகுதி என்பதால் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் மருத்துவக் குழுவினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Intro: தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சுயம்பு சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி சனிவாரத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Body: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது குச்சனூர் கிராமம். நவக்கிரகங்களில் முக்கியமானவராக கருதப்படும் சனீஸ்வர பகவான் பெரும்பாலும் நவக்கிரங்களிலோ அல்லது துனைக் கோவில்களிலோ தான் வீற்றிருப்பார். ஆனால் தமிழகத்தில் சனீஸ்வரருக்கு என்று ஆலயம் அமைந்துள்ளது திருநள்ளாறு மற்றும் குச்சனூர் மட்டுமே. இதில் குச்சனூரில் உள்ள சுரபி நதிக்கரையில் சுயம்புவாக சாந்த சொரூபனாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார் சனீஸ்வரர். இதனால் தேனி மாவட்டம் இன்றி தமிழகத்தில் இருந்து அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தங்களது தோஷம் நிவர்த்தி அடைய மற்றும் சனிதிசை நடப்பவர்கள் அதிகமான அளவில் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் உள்ள சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறும். இந்தாண்டுகான ஆடி சனி வாரத் திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.
கோவில் பிரகாரத்தில் உள்ள கொடிமரத்துக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புனித நீர் கொண்டு வரப்பட்டு கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் காக்கை உருவம் பதித்த கருநீல கொடி ஏற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பகவானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது. பக்தர்கள் எள் தீபம் ஏற்றியும், காகம் உருவம் பதித்த பொம்மைகள், பொறி உள்ளிட்டவைகளை படைத்து வழிபட்டனர்.
இன்று தொடங்கிய இத்திருவிழா ஆடி மாதத்தில் வருகின்ற அனைத்து சனிக்கிழமைகளிலும் நடைபெற்று வரும் ஆகஸ்ட் 17ம் தேதி நிறைவடைகிறது. இதில் மூன்றாவது சனிக்கிழமை அன்று நீலாதேவி - சனீஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
திருவிழாவை முன்னிட்டு தேனி மாவட்டம் இடங்களில் சென்னை மதுரை திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் அதிகமாக வந்து செல்லும் பகுதி என்பதால் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் மருத்துவக் குழுவினர் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Conclusion: மேலும் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.