ETV Bharat / state

தேனியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் கலவரம்.. வாகனங்களுக்கு தீ வைப்பு, போலீசார் மீது தாக்குதல்.. 40 பேர் கைது! - 40க்கும் மேற்பட்டோர் கைது

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில் இளைஞர்கள் வாகனங்களுக்கு தீ வைத்ததோடு, போலீசாரையும் கல் வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Riots
கலவரம்
author img

By

Published : Apr 15, 2023, 11:21 AM IST

அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் கலவரம்

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நேற்று(ஏப்.14) காலை முதலே பல்வேறு அரசியல் கட்சியினரும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாலையில், பட்டாளம்மன் கோவில் தெரு இளைஞர்களும், கல்லுப்பட்டி இளைஞர்களும் தீச்சட்டி ஏந்தியபடி, மேளதாளங்களுடன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றனர்.

அப்போது, யார் முதலில் மரியாதை செலுத்துவது? என்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது, இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். விழா ஏற்பாட்டாளர்கள் வைத்திருந்த நாற்காலிகள் மற்றும் இருசக்கர வாகனங்களையும் இளைஞர்கள் அடித்து நொறுக்கினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மோதலில் ஈடுபட்ட இளைஞர்கள் விரட்டினர். இதையடுத்து இளைஞர்கள், காவல் நிலையத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கி, காவல் நிலையத்திற்குள் கல் வீசி தாக்கினார்கள். இதில் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆய்வாளரின் வாகனம், 108 ஆம்புலன்ஸ் வாகனம், பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. 15-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களையும் அடித்து உடைத்தனர். கல் வீசி தாக்குதல் நடத்தியதில் காவல்துறை ஆய்வாளர் மீனாட்சி உட்பட பல காவலர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ், வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்தார். இந்த கலவரம் தொடர்பாக 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. கலவரம் ஏற்பட்ட பகுதியை பெரியகுளம் கோட்டாட்சியர் சிந்து, பெரியகுளம் வட்டாட்சியர் காதர் ஷரிப் ஆகியோர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. இதனால் பெரியகுளம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில், வன்முறையில் ஈடுபட்ட இரு தரப்பினரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், வெவ்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: பட்டவர்த்தியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா: 560 போலீசார் குவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.