ETV Bharat / state

சாலை வசதி செய்து தாருங்கள்! இல்லையேல் எங்களுக்கு குடியுரிமை தேவையில்லை!

தேனி: சாலை வசதி செய்து தாருங்கள், இல்லையெனில் எங்களுக்கு குடியுரிமை தேவையில்லை என மலைவாழ் மக்கள் தங்கள் ஆதங்கத்தினை பதிவு செய்துள்ளனர்.

தேனி மலைவாழ் மக்கள் போராட்டம்
தேனி மலைவாழ் மக்கள் போராட்டம்
author img

By

Published : Jul 7, 2020, 6:48 PM IST

பெரியகுளம் அருகே உள்ளது அகமலை ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட கண்ணக்கரை பகுதியில் இருந்து 5கி.மீ தொலைவில் மருதையனூர், சொக்கன் அலை, பட்டூர், படப்பம்பூர், அலங்காரம், சூலையூர் ஆகிய 6 மலைக் கிராமங்கள் உள்ளன. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் போடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட இந்த மலைக் கிராமத்தில், சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் மலைவாழ் பழங்குடி மக்கள் ஆவர். இச்சூழலில் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் சாலை வசதி இல்லாமல் உள்ளது, இந்த மலை கிராமம். இதனால் இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் உடல்நிலை சரி இல்லாமல் போனாலோ அல்லது பிரசவ நேரங்களில் பெண்கள் அவதிப்பட்டாலோ டோலி கட்டிதான் கண்ணக்கரைவரை கொண்டு வந்து, அங்கிருந்து ஜீப்பில் பெரியகுளம் செல்வர்.

தேனி மலைவாழ் மக்கள் போராட்டம்
தேனி மலைவாழ் மக்கள் போராட்டம்

சாலை வசதி இல்லாத நிலையில் உடல் நிலை சரியில்லாதவர்களை டோலி கட்டி தூக்கி வரும்போது பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பல ஆண்டுகளாக சாலை வசதி வேண்டி அப்பகுதி மக்கள் துணை முதலமைச்சரிடம் மனு அளித்து வந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு, 2016ஆம் ஆண்டு கண்ணக்கரையில் இருந்து மருதையனூர் வரையில் உள்ள 2.5 கிமீ தூரத்திற்கு சாலை அமைக்க ரூ.6 கோடியே 70 லட்சத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டது.

பணத்தை கட்டிவிட்டு உடலை வாங்கிக்கோ...! மருத்துவமனையில் திகைத்து நின்ற மகள்

ஆனால் ஒப்பந்தம் விடப்பட்டு நிலம் அளவிடும் பணிகள் முடிந்து 4 ஆண்டுகள் ஆகியும், இதுநாள் வரையில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படாமலே உள்ளன. இதனையடுத்து தற்போது இரண்டாவது முறையாக 37 லட்சம் ரூபாய் செலவில் கற்களை பதித்து புதிதாக சாலை அமைக்கும் பணிக்கும் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.

தேனி மலைவாழ் மக்கள் போராட்டம்
தேனி மலைவாழ் மக்கள் போராட்டம்

இவ்வேளையில் ஒப்பந்தம் விடப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேல் ஆன நிலையிலும், சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படாததால் இன்று மலை கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் கண்ணக்கரை பகுதிக்கு வந்து தங்களின் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் ஆதார் உள்ளிட்ட அடிப்படை அடையாள அட்டைகளை கையில் ஏந்தி சாலை அமைக்கு பணிகளை தொடங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு அறிவித்த சாலை அமைக்கும் பணிகளை ஒரு மாத காலத்திற்குள் தொடங்காவிட்டால் ஆதார் உள்ளிட்ட தங்களது குடியுரிமைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துவிடுவதாக மலைக் கிராம மக்கள் தீர்மாணம் நிறைவேற்றியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.