ETV Bharat / state

தேனியில் இரு வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு! - Aundipatti

தேனி: ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரம் மற்றும் பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வடுகபட்டி ஆகிய இரு வாக்குச்சாவடி மையங்களில் தற்போது மறு வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

repoling
author img

By

Published : May 19, 2019, 11:31 AM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றபோது ஏற்பட்ட குளறுபடி காரணமாக 13 வாக்குச்சாவடி மையங்களுக்கு மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து இன்று நாடு முழுவதும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, சூலூர் உள்பட நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல், 13 வாக்குச்சாவடி மையங்களுக்கு மறுவாக்குப்பதிவும் நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில் தேனி மக்களவைத் தொகுதியில் உள்ள ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரம், பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வடுகபட்டி ஆகிய இரு வாக்குச்சாவடி மையங்களில் தற்போது வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

மறுவாக்குப்பதிவு

பாலசமுத்திரம் கம்மவார் சரஸ்வதி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி நிலையத்தில் உள்ள பாகம் எண் 67-க்குரிய மையம், வடுகபட்டி சங்கரநாராயணன் நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி நிலையத்திற்குட்பட்ட பாகம் எண் 197-க்குரிய மையங்களில் தற்போது மறு வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

வாக்களிக்கவரும் வாக்காளர்களுக்கு இடது கை நடு விரலில் அடையாள மை வைக்கப்படுகிறது. மத்திய துணை பாதுகாப்புப் படை, தமிழ்நாடு காவல் துறை உட்பட மூன்றடுக்கு பாதுகாப்பு இங்கு போடப்பட்டுள்ளது.

Intro: தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள இரு வாக்குச்சாவடி மையங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

Body: தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரம் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடுகபட்டி ஆகிய இரு வாக்குச்சாவடி மையங்களில் தற்போது மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பாலசமுத்திரம் கம்மவார் சரஸ்வதி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி நிலையத்தில் உள்ள பாகம் எண் :67க்குரிய மையம், வடுகபட்டி சங்கரநாராயணன் நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி நிலையத்தில் பாகம் 197க்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இவ்விரு தொகுதிகள் உட்பட தமிழகத்தில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்திட இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தற்போது தேனி மாவட்டத்தில் உள்ள இரு வாக்குச்சாவடி மையங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தேனி பாராளுமன்றம், மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கான மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன. இதில் வாக்காளர்களுக்கு இடது கை நடு விரலில் அடையாள மை வைக்கப்படுகிறது.

Conclusion: இந்த மறுவாக்குப்பதிற்காக மத்திய துணை ராணுவம், தமிழக காவல் துறை உட்பட 3 அடுக்கு பாதுகாப்பு ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.