ETV Bharat / state

திருமணம் மீறிய உறவு: திட்டம்தீட்டி கணவனைக் கொன்ற மனைவி - wife killed husband

மேலப்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சேதுபதி என்பவருடன் கலையரசிக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது திருமணம் மீறிய உறவாக மாறியது. இந்த விபரம் கணவர் முத்துக்காளைக்கு தெரியவரவே அவரை கண்டித்துள்ளார். இதனால் கணவரை கொலை செய்வதற்கு சேதுபதியுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியுள்ளார்.

திருமணம் மீறிய உறவு
திருமணம் மீறிய உறவு
author img

By

Published : Nov 8, 2020, 9:30 PM IST

தேனி: கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டியில் உள்ள பள்ளிக்கூடம் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்காளை(42). இவருக்கு கோட்டூர் அருகே உள்ள தர்மாபுரியை சேர்ந்த கலையரசி என்பவருடன் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கட்டிட வேலை பார்த்து வரும் இத்தம்பதியினருக்கு ஹரிஷ்குமார் (13), கிஷோர் குமார் (12) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக கடந்த அக்டோபர் 3ஆம் தேதி மேலப்பட்டிக்கு வருவதாக முத்துக்காளை தனது சகோதரன் ஈஸ்வரனிடம் கூறியுள்ளார். ஆனால் இரண்டு தினங்களாகியும் தம்பி வராததால், சந்தேகமடைந்த ஈஸ்வரன், தர்மாபுரிக்குச் சென்று கலையரசியிடம் அவர் குறித்து விபரம் கேட்டறிந்துள்ளார். அதன் பின்னர் தனது சகோதரன் முத்துக்காளையை காணவில்லை என அக்டோபர் 5ஆம் தேதி வீரபாண்டி காவல்நிலையத்தில் ஈஸ்வரன் புகார் அளித்துள்ளார். அப்போது உடன் சென்ற கலையரசியும் தனது கணவரை காணவில்லை எனக்கூறியுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினரின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்றிரவு காமாட்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் கிணற்றில் முத்துக்காளையின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் அழுகிய நிலையில் மிதந்த சடலத்தை மீட்டனர். அதில், இறந்த முத்துக்காளையின் உடலில் காயங்கள் இருப்பதை அறிந்த காவல்துறையினர், கலையரசியிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சேதுபதி
சேதுபதி

காவல்துறையினரின் விசாரணையில், மேலப்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சேதுபதி என்பவருடன் கலையரசிக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது திருமணம் மீறிய உறவாக மாறியது. இந்த விபரம் கணவர் முத்துக்காளைக்கு தெரியவரவே அவரை கண்டித்துள்ளார். இதனால் கணவரை கொலை செய்வதற்கு சேதுபதியுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து சேதுபதியின் நண்பன் கணேசன் என்பவரது உதவியுடன் மூவரும் சேர்ந்து முத்துக்காளையின் தலையில் இரும்புக்கம்பியால் அடித்துக் கொலை செய்து, சடலத்தை காமாட்சிபுரத்தில் உள்ள கிணற்றில் வீசிவிட்டு யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்று தானும் காணவில்லை எனக்கூறி நாடகம் ஆடியது தெரியவந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கலையரசியை அழைத்துச் சென்ற காவல்துறையினர், சடலத்தை பார்வையிட்டு உறுதி செய்தனர். பின்னர் சேதுபதி மற்றும் கலையரசி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கணேசனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.