தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து மேகமலை செல்லும் சாலையில் 4 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது பாரத் பெட்ரோல் கிடங்கு. இந்த கிடங்கில் விருப்பங்களுக்கு சிறகு கொடு என்னும் திட்டத்தின் மூலம் சில அற்புதமான திட்டங்களை செயல்படுத்திவருகிறது.
மலைப்பகுதியில் செல்லும் வாகனங்கள் இந்த கிடங்கில் ஏடிஎம் பற்றுஅட்டை மூலம் சுமார் ரூ.20 ஆயிரம் வரை பணம் பெறலாம். டிராவல்ஸ் முன்பதிவு, பேருந்து பயணச்சீட்டு முன்பதிவு செய்தல், மின் கட்டணம் செலுத்துதல், மொபைல் ரீசார்ஜ் உள்ளிட்ட வசதிகளும் உள்ளது. மேலும், மத்திய அரசு மானிய விலையில் வழங்கும் எல்இடி பல்பும் விற்கிறார்கள். இது தவிர வாகனத்துக்கு ஆயில் மாற்றுபவர்களுக்கு பரிசாக டீசர்ட் வழங்குகிறார்கள்.
மலைப்பாதையில் கடைகளோ, ஏடிஎம் இயந்திரமோ இல்லாத இந்த சாலையில் இத்தகைய வசதி இருப்பது அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.