தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி சிறந்த சுற்றுலாத் தலமாகவும், புண்ணிய ஸ்தலமாகவும் உள்ளது. ஹைவேவிஸ் மலையில் உள்ள தூவானம் அணையிலிருந்து வரும் தண்ணீரும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீரும் சுருளி அருவிக்கு வருவதால், ஆண்டின் எல்லா நாட்களிலும் இந்த அருவியில் தண்ணீர் வரத்து இருக்கும்.
தற்போது ஏற்பட்டுள்ள வடகிழக்கு பருவமழையினால் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேகமலை வனப்பகுதியிலிருந்து சுருளி அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு இன்று முதல் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தண்ணீரின் அளவு சீரானதும் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறையினர் கூறினர். மேலும் தற்போது சபரிமலை சீசன் என்பதால் சுருளி அருவிக்கு வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: