ETV Bharat / state

மாணவியை தேர்வு எழுத அனுமதி மறுத்த விவகாரம்: அமைச்சரின்  உத்தரவைப் பின்பற்றாத  தனியார்ப் பள்ளி!

தேனி : ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு கிராமத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் யுகிதா கல்விக்கட்டணம் செலுத்தாததால் காலாண்டுத்தேர்வை எழுதவிடாமல் மாணவி யுகிதாவை பள்ளியை விட்டு வெளியேற்றியது, பள்ளி நிர்வாகம். இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட உத்தரவையும் தற்போது பின்பற்றாமல் செயல்பட்டு வருவதாக, அங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/19-September-2019/4491586_98_4491586_1568902880979.png
author img

By

Published : Sep 19, 2019, 8:30 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு கிராமத்தில் தனியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் கடமலைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த இலக்கியா, ஆனந்தன் தம்பதிகளின் மகள் யுகிதா ஏழாம் வகுப்பு படித்து வந்தார். யுகிதாவின் தந்தை ஆனந்தன் விவாகரத்து பெற்று பிரிந்து சென்று விட்ட நிலையில், இலக்கியா தனது மகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்து வருகிறார். எல்.கே.ஜி முதல் ஏழாம் வகுப்பு வரை அதே பள்ளியில் படித்து வரும் யுகிதா நடப்பாண்டில் கல்விக்கட்டணம் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். ரூ.25 ஆயிரம் பள்ளிக்கட்டணம் செலுத்த பள்ளி நிர்வாகம் கூறிய நிலையில், கடந்த வாரம் ரூ.6 ஆயிரத்தை யுகிதாவின் தாயார் செலுத்தியுள்ளார்.

தனியார் பள்ளி வாளகத்தில் கண்ணீர் மல்க நின்ற தாயும்,மகளும்

இந்நிலையில் மீதித்தொகையையும் உடனே கட்டவேண்டும் என்று கூறி தற்போது நடைபெற்று வரும் காலாண்டுத்தேர்வை எழுதவிடாமல் மாணவி யுகிதாவை வெளியேற்றியது, பள்ளி நிர்வாகம். இதனால் பள்ளி வாசலில் சீருடை மற்றும் புத்தகப்பையுடன் அழுதுகொண்டே நின்றிருந்தவரை, தாயார் இலக்கியா பள்ளிக்குச் சென்று கண்ணீர் மல்க அழுது கொண்டே வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இச்சம்பவம் அனைத்து பெற்றோர் மத்தியிலும்; பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தனது மகளை குமணன்தொழுவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்த்துள்ளார், அவரது தாயார் இலக்கியா.

இதனிடையே தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் செலுத்த இயலாத குழந்தைகளை அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் அதே பள்ளியில் கல்வி கற்பிக்க வேண்டும், மேலும் கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் அமைச்சரின் இந்த உத்தரவை காற்றில் பறக்க விட்டு, தனியார் பள்ளி நிர்வாகத்தினர் செயல்பட்டு வருவதாக, அப்பள்ளியில் மாணவர்களைச் சேர்த்த பெற்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க

பச்சைத் தங்கத்தை வளர்ப்போம்: உலக மூங்கில் தினம்!

Intro: கல்விக்கட்டணம் செலுத்த இயலாததால் தனியார் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்ட மாணவி, அரசுப்பள்ளியில் சேர்ந்து படிப்பை தொடர்கிறார்.
ஆண்டிபட்டி அருகே கல்விக்கட்டணம் செலுத்த இயலாததால், தேர்வுக்கு அனுமதிக்காமல் 7ஆம் வகுப்பு மாணவியை வெளியேற்றிய தனியார் பள்ளி நிர்வாகத்தால் அரசுப்பள்ளியில் பிள்ளையை சேர்த்த தாய். அமைச்சரின் உத்தரவை காற்றில் பறக்க விடும் பள்ளி நிர்வாகம்.
Body:          தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு கிராமத்தில் ஹயக்ரீவா என்ற தனியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் கடமலைக்குண்டு கிராமத்தை சேர்ந்த இலக்கியா -ஆனந்தன் தம்பதிகளின் மகள் யுகிதா ஏழாம் வகுப்பு படித்து வந்தார். யுகிதாவின் தந்தை ஆனந்தன் விவாகரத்து பெற்று பிரிந்து சென்று விட்ட நிலையில், இலக்கியா தனது மகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்து வருகிறார்.
எல்.கே.ஜி முதல் ஏழாம் வகுப்பு வரை இதே பள்ளியில் படித்து வரும் யுகிதா நடப்பாண்டில் கல்விக்கட்டணம் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். ரூ.25 ஆயிரம் பள்ளிக்கட்டணம் செலுத்த பள்ளி நிர்வாகம் கூறிய நிலையில், கடந்த வாரம் ரூ.6 ஆயிரத்தை யுகிதாவின் தாயார் செலுத்தியுள்ளார்.
இந்நிலையில் மீதித்தொகையையும் உடனே கட்டவேண்டும் என்று கூறி தற்போது நடைபெற்று வரும் காலாண்டுத்தேர்வை எழுதவிடாமல் மாணவி யுகிதாவை பள்ளியை விட்டு வெளியேற்றியது, நிர்வாகம். இதனால் பள்ளி வாசலில் சீருடை மற்றும் புத்தகப்பையுடன் அழுதுகொண்டே நின்றிருந்தவரை, தாயார் இலக்கியா பள்ளிக்கு வந்து கண்ணீர்மல்க அழுது கொண்டே வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இச்சம்பவம் அனைத்து பெற்றோர் மத்தியிலும்; பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தனது மகளை குமணன்தொழுவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்த்துள்ளார் அவரது தாயார் இலக்கியா. அங்கு தனது படிப்பை தொடர்ந்து வருகிறார் மாணவி யுகிதா. Conclusion: இதனிடையே தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் செலுத்த இயலாத குழந்தைகளை அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் அதே பள்ளியில் கல்வி கற்பிக்க வேண்டும், மேலும் கல்விக்கட்டணம் செலுத்தாத மாணாக்கர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் அமைச்சரின் இந்த உத்தரவை காற்றில் பறக்க விட்டு செயல்பட்டு வருகிறது இந்த தனியார் பள்ளி நிர்வாகம்.
         
For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.